என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

திங்கள், 19 நவம்பர், 2012

தமிழினத்தின் தலைமகன்....


தவமாய் தவமிருந்து  
எம் தமிழ்த்தாய் 
பெற்றெடுத்த
தமிழினத்தின் தலைமகன்....

மழைக்கு பின் மாதமாய் 
பனிக்கு முன்  மாதமாய் 
திகழும் கார்த்திகையாம் 
எம் தலைவன் பிறந்தான் ஒளியாய்,,,
இனம் காக்க அவனே வந்தான் புலியாய்...

இன உணர்வை உயிரில் கலந்தான்
உயிரை துச்சமென துயில் களைந்தான்..
செத்து  செத்து சாவை சலிப்படைய செய்தான்...
எதிர்த்தவனை எமனிடம் நட்புற செய்தான்...
நேர் நின்று எதிர்க்க இல்லாமல் செய்தான்...


இன்று முதல் எம் பதிவுகள் தொடக்கம்,,
அவனை பற்றி 
சிந்தித்தால் இல்லை சிந்தனையில் முடக்கம்...
அகிலத்தின் அத்தனை சரித்திரமும் அவனில் அடக்கம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக