என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

புதன், 31 அக்டோபர், 2012

மரணம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட நாள் .......



நூற்றாண்டில் நிகழ்ந்திடாத அதிசயம் 
இவரது பிறப்பும் இறப்பும் ஒரே தினத்தில்....

இனி இவர் போல பிறக்க இல்லை வாய்ப்பு...
அது தருணத்தில் எமன் செய்த ஏய்ப்பு....

தர்மதேவதையின் தலைமகன் 
இவர் 
அண்டியோர்க்கு அள்ளி 
கொடுத்து சிவந்த பொற்கரம்...
ஆங்கிலேயனை அதிர செய்தது 
இவரது  இரும்புக்கரம்....
சாதியில் இல்லை இவருக்கு பேதம்...
தர்மம் மட்டுமே இவர் வாழ்வின் வேதம்...
வங்கத்துக்காரன் ஏற்றுகொண்ட தமையனாய் 
ஆங்கிலக்காரன் அஞ்சி நின்ற சிங்கமாய்....
இவர் சொல்லிய அரசியல் சூசகம்
ஏற்றிருந்தால் இல்லை இன்று யாசகம் .....
தன் தசை நரம்பு எலும்பெல்லாம் 
தேசத்தை கலந்து
குருதியில் உறுதியை குழைத்து 
இறுதி வரை தனக்கென்று வாழா மனிதரை 
வாழையடி வாழையாய் வணங்கி 
நிற்றல் எம்மினத்தின் பெருமையாகும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக