என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

ஞாயிறு, 6 மே, 2012

மரணித்து காட்டு...


தடித்த தோள்களுண்டு...
துடிக்கும் கரங்களுண்டு....
வெடிக்கும் வீரமுண்டு....
தமிழா !!
எல்லையை தாண்டும் பாத வேகமுண்டு...
மலை முட்டி நொறுக்கும் தேக பலமுண்டு ...
இத்தனைக்கும் முரண்பாடான எண்ணமுண்டு..
முரண்பாட்டால் முடியாமல் போன
சரித்திரமும் உண்டு....
தமிழா நீ !!
சாதியால் சாதித்து காட்டு...
மதத்தால் முடித்து காட்டு...
கட்சியால் கர்சித்து காட்டு...
இதில் எதிலும் முடியாவிட்டால் மரணித்து காட்டு...
கன்னியரிடம் கவிழ்ந்து மரணிப்பதை விட ..
வாழ்வின் வெறுப்பில் மரணிப்பதை விட....
எதுவும் முடியா முயற்சியால் மகிழ்வுடன் மரணித்து காட்டு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக