என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

வெள்ளி, 4 மே, 2012

தேவை தேவையா !!!

இந்த சொல் இல்லா விடில் இனித்திடும் 
வாழ்க்கை சப்பென்று சலித்து விடும்,,
இது நிலையா வாழ்வில் நிலையானது..
ஆலயங்கள் அவசியமற்று...
தேடுதல்கள் குறைவுற்று,,
பலமும் பலவீனமும் சரிசமமாகும்...
ஆசை அசைவற்று போகும்...
அவுடதங்கள் இல்லாமல் போகும்..
சமர்கள் சமரசமாகி
சரித்திரங்கள் சத்தமில்லாமல் போகும்...
உணர்வுகள் உள்வாங்கி கொண்டு
உணர்ச்சிகள் உதவாமல் போகும்....
தேவையொன்று இல்லாவிடில்
இனமில்லை
மதமில்லை
இறைவனுமில்லை...
ஒவ்வொரு
தொடக்கமும் முடிவும்
ஆக்கமும் அழிவும்
தேவையை ஒற்றியே...........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக