என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

வியாழன், 3 மே, 2012

நன்றியுரைக்கிறேன்.......

மனிதனுக்கே உரித்தான நன்றியை
நலமுடன் உரைக்கிறேன்....
மறந்து போன மனிதனை
மறந்து போக நினைக்கிறேன்...
நன்றி கூற
கடமையுள்ளவர்களை
தவிர்க்கிறேன்...
வாழ்க்கையை பயிற்சிக்க செய்த
துரோகிகளுக்கு மிக்க நன்றியுரைக்கிறேன்...
சுயநிலையை உரைப்பித்த
எதிரிகளுக்கு ..
வாழ்நிலையை உயிர்ப்பித்த
வறுமைக்கு,,,
சூழ்நிலையில் உறைய வைத்த
உறவுகளுக்கு தவறாது நன்றியுரைக்கிறேன்...
உணர்வுகளை மரத்துப்போக செய்த
கடந்து போன காதலுக்கு.....
திக்கு தெரியாத பொழுது
திசை காட்டிய நண்பர்களுக்கு....
மீண்டும் மீண்டும் நன்றி கூறுகிறேன்...
இத்தனைக்கும் மனித பிறவியாய் படைத்து
அல்லாட வைத்த இறைவனுக்கு கோடி நன்றியுரைக்கிறேன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக