என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

திங்கள், 15 அக்டோபர், 2012

நெஞ்சில் தீ




பற்றிய தீ ...
தீராமல் என்றும் நெஞ்சினில் 
எம் இனம் கண்ட தீரா வஞ்சம் 
எவ்வகையில் தாங்கும் நெஞ்சம்....
கொண்ட பகையில் 
நட்பின் கலப்படம்....
கண்ட உறவில் 
சாவின் நிழற்படம்...

அணையுமோ 
நெஞ்சத்தின் பிழம்பு...

அணைகட்டி நிற்கும் சலனங்கள் 
முளைவிட்டு போகும் ஆசைகள்,,,
நிலையற்று போகும் பொய்கள்...

இத்தனையும் நெஞ்சினில் தீயாய்...
அணைவது சாத்தியமா..

எழுதப்படாத தீர்மானங்கள்
எழுதிவைத்த உணர்வற்ற உரிமைகள்..
தகதகக்கும் தனிவற்ற கொள்கைகள்...
நீர் கொண்டு அணைத்திட இயலுமோ...
செந்நீர் காணாமல் அணைந்திடுமோ..

சிதைக்கு வைத்த தீயே  தீயை அணைத்திடும்...
அதுவரை நெஞ்சினில் இருந்திடும்...அணையா தீ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக