என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

புதன், 24 அக்டோபர், 2012

உணர்வு வியாபாரிகள்...


எங்கும் உணர்வின் விளைச்சல் 
எம் தமிழ் நிலத்தில்...
எம் நிலத்தில் நீர் வற்றிய போதும்
எம்மின் 
உணர்வுகள் வற்றியதில்லையே...
ஆதி சொந்தங்கள்  
அனாதையான அந்நேரம் 
உணர்வுகள் தளிர்க்கும்...
ஆழியில் சொந்தங்கள் 
குருவிகளாக்கும் தருணம் செழிக்கும்...
அணைகள் 
அடைத்தாலும் உடைத்தாலும்
சீர்கொண்டு உணர்வு தழைக்கும்...
எம் நில உணர்வுகள் போல 
பிரபஞ்சத்தில் எதுவும் பெரிதில்லை...
ஆயினும் 
முற்றிய எம் உணர்வு பயிரை..
பசிக்கு உணவாய் ,
பிணிக்கு ஔடதமாய் 
எம்தேசம் செழிக்க இல்லாமல்....
தான்தோன்றியாய் எம்முணர்வை...
விற்க வியாபாரிகள் மட்டுமே இங்கு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக