புவி ஈர்ப்பு விசைக்கும்
நம்பிக்கைக்கும்
இடைக்கொண்டது
நூலிடை அளவே...
இல்லாதோர்க்கு கண்ட
மாந்தரெல்லாம் பகையே,,
கொண்டவர்க்கு வரமே வாழ்க்கையாகும்...
தாளிட்ட கதவுகள்...
இடைமறிக்கும் வேலிகள் ....
அளவிட்ட தொகைகள்...
இத்தனைக்கும் அவசியம்
அவசியமற்று தழைக்கும் மானுடம்...
நம்பிக்கை
இல்லா வாழ்வு தன்னை அழிக்க
ஆயுதம் வீசும் நிகழ்வாகும்...
நம்பி வாழ நம்பிக்கையிருந்தும்
நம்பிக்கை கொண்ட வாழ்க்கை
எம்மில் இல்லை என்பதே நிதர்சனம்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக