ஒரு பொழுதும் வெற்றி
எமக்கு அவசியமில்லை - எம்மில்
சமாதானமும் சண்டையும்
என்றும் நிலைக் கொள்ளும்.
முதலில் தோற்பதும்,
விளிம்பில் வெல்வதும் என் வாடிக்கையாகும்..
எனவே தோல்விக் களைப்பும்
வெற்றிக் களிப்பும் எம்
உள்ளத்தில் ஒருசேர பயணிக்கும்....
பரிவு கொள்வோரும் பகைக்
கொண்டோரும் எம்மில்
நிரந்தரம் செய்வர் - எம்மை
வீழ்த்தி வெற்றி கொண்டோரும் ,
எம்மில் வீழ்ந்து தோல்வி
கண்டோரும் நட்புக்கொள்வர்...
அமிலமும் அமிர்தமும் அகத்தில் கொண்டவன் ,
விடைகளுக்கு வினாவளித்து
விளையாட்டும் விபரீதமும் ஒன்றிணைந்த
நான் சற்றே விசித்திரமானவன்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக