என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

வெள்ளி, 17 பிப்ரவரி, 2012

கவிதையின் கதை


உள்ளத்தின் உளறல்கள்
ஒவ்வொன்றாய் உதிரும்...
எணண்ங்களும் எழுத்துக்களும்
எதிரெதிராய் வாள் வீசும்...
நாளச்சுரப்பிகள் கற்பனையை
கவிதையாய் சுரக்கும்...
உருவமில்லா சிற்பங்கள்
காகிதத்தில் உருவாகும்...
உயிரில்லா எழுத்துக்கள்
மூச்சுவிட்டு உயிர் வாழும்...
இயற்கையின் சுகிர்வை
உணர்த்தும் ரசனைகளின் ஆலயம்....
காதலில் களிப்போர்க்கு
கண்டபடி கவிபாடும்...
காதலில் நொந்தவர்க்கு
பிரிவில் விழி மூடும்...
அழுகையின் ஆற்றாமையை
அதிர்வாய் வெளிபடுத்தும்...
அடங்கா ஆத்திரத்தின்
கிளர்வாய் வெடித்து சிதறும்...
கவிபாடி திளைத்தோர்க்கு
உண்மை உறைவிடம்...
எனை போல அரை குறைகளுக்கு
அற்புத இருப்பிடம்.........................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக