என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

புதன், 22 மே, 2013

இனம் வாழ....


எம் தேசத்து 
ஆற்றங்கரைகள் போலவே 
எம்மக்களும் காய்ந்த 
நிலையிலே..
படுகையின் பள்ளங்களில் 
தேங்கும் நீரும் 
நதிகளில் காணமல் 
போனதே....
அழிவில் 
முதற்கண்  மொழி 
வழிமொழியும்  இனம்  
பின் தொடரும் இயற்கை...
வீழ்வதற்கு ஒன்றுமில்லை
இனி எழுவதற்கு 
வானம் மட்டுமே எல்லை...
மொழி வாழ யாழ் மீட்டு 
இனம் வாழ வாள் தீட்டு 
நிலம் வாழ ஏர் பூட்டு...
சிந்தையில் செய்வதறியா
நிலைக் கொண்டால் ! எம்மினமே 
சத்தமில்லாமல் மடிந்து போவாய்...
நிலைமாறும் முன் நிலைமாறு...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக