ஆணையிட்ட மன்னனுக்கு
யானை மீதேறி போரிட்ட தமிழனவன்...
காலாட்படையில் வேல் தாங்கி
இமயத்திலும் புலிக்கொடி ஏந்தியவன்
முகலாயனை குலைநடுங்க
செய்திட்ட சோழ மைந்தனவன்
கால மாற்றத்தில் உருக்குலைந்த
எம்மினத்தின் அடையாளம்
வாழும் வேலும்..
மாய்ந்த விலாசத்தை
மீட்டெடுத்தான் ஈழத்தின் சோழன்
வாளுக்கு துவக்கு கையில்
வேலுக்கு இவன் வேலுக்கு பிள்ளை
தமிழனும் அவனும் வேறேதும் இல்லை
இவன் தோட்டக்களில் தோற்றம் மாறியவன்...
ஆயுதம் மாறியதே அன்றி இலக்கு அல்ல
ஆதியிலும் சரி மீதியிலும் சரி
வீரமே எம் இனத்தின் அடையாளம்
போரும் ஏறும் மட்டுமே எனது குலத்தொழில்..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக