என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

திங்கள், 6 மே, 2013

வாழையடி வாழையாய் ....


வாழையடி வாழையாய் 
தளைத்த எம் தமிழினம் 
இன்று சாதிகளாலும் 
மதங்களாலும் 
கருகிய நிலையில் 
அரசியல் அரிவாளால்
வெட்டு பட்டு போனதே...
கொத்து கொத்தாய் 
குலை குலையாய் 
கூட்டம் கூட்டாமாய் 
செழித்த எம்மினம் 
தன்னந்தனி ஆனதே...
வீழ்ந்து விட்ட விதையில் 
சொட்டுநீர் பட்டு விடாதா !
இனியொரு நிகழ்வில் 
அதிசயம் நிகழ்ந்திடாதா !
"இனியொரு விதி செய்வோம்"
என்றிட்ட எம் நாட்டு புலவன் 
வாக்கு பலித்திடாதா !
கன்றுகளோடு வாழை தளைத்திடாதா !
ஏக்கத்துடன் நடை பயில்கிறேன் 
எம் தமிழ் தோட்டத்தில்...










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக