விட்டெறிந்த கல்லில்
கலங்கிய
ஓடா நீர் போல சலனம்,,,
சித்தனையும் பித்தனாக்கும்...
மதுவாய்
மாதுவாய்
உறவாய்
பிரிவாய்
சேர்வாய்
சலனம்
உற்றது போல தோன்றும்...
இல்லாதிருக்கும் வரை வரம்பில் இருக்கும் மனது...
எனினும் எதிலும் ஒட்டாமலிருக்கும்..
நிலையானது நிரந்தரமில்லை என ...
மலையான மகத்துவத்தை உணர்த்தும்...
பொய்யான உணர்வுகளுக்கு
சலனம் சட்டென்று உதவும்...
இதற்கு உட்படா வாழ்வது அரிது..
உட்பட்டு வாழ்தல் மானிடரின் இசைவு....
மொத்த நரம்பு மண்டலமும் அடங்கி
சலனத்தில் முடங்கி போகும்...
சலனத்தின் முடிவு சங்கடம்...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக