இத்தலைப்பை யோசித்தேன் பலமுறை..
புரிபட வில்லை இதனின் வழிமுறை .
இத்தலைமுறையில் நாம் செய்ததென்ன சாதனை..
சற்றே நினைந்தால் மிஞ்சுமே மன வேதனை..
வழிவரும் தலைமுறைக்கு செய்யாத சாதகம்.
தலைமுறைகள் கடந்த பின்னே விளையும் பாதகம்.
சித்தாதி சித்தனும் அக்காலத்தே பாடி வைத்தான்..
அதை இக்காலத்து பித்தனும் மூடி வைத்தான்..
ஆதி தமிழன் சொல்லி வைத்தான் சூசகம்..
தொலைத்ததால் கரம் நீட்டி கேட்கும் யாசகம்..
நாற்பத்தியேழு வரை சுதந்திரம் மட்டுமே இலக்கு..
அது கிட்டியதுடன் மந்தி கை மாலை போல் வழக்கு.
தெள்ளிய சிந்தனை இல்லா பெரும் தலைகள்..
அதனால் முளைத்ததே தடையாக வெறும் களைகள்.
இந்திய தாயின் தலை முதல் பாதம் வரை அவலம்..
பாதம் தன்னில் ஊரு செய்தால் பாரதமே கவிழும்..
" இனியொரு விதி செய்வோம் " பாரதி சொன்ன படி..
இனியாவது விழித்து வழி செய்வோம் நல்ல படி.
தலைமுறை செழித்து வாழ வழியமைப்போம்..
சிக்கல்களையும் ,சட்டங்களையும் சீரமைப்போம்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக