வெண்சட்டை மேல்கொண்ட கதர் அணிந்தவன்..
செஞ்சட்டை அணிந்த தோழமை கொண்டவன்..
கருஞ்சட்டை அணிந்த தன்மான தமிழன்..
இருவண்ணம் கொண்டு உடன்பிறந்தவன்..
வண்ணங்களிடையே வெண்மை கொண்டவன் ரத்தமானவன்..
பச்சை,மஞ்சள்,காவி,இன்னும் எத்தனையோ ..
நிறங்களில் வண்ணமாகி தன் அடையாளம்
தன்னை தொலைத்து தேடுவதே ..
பிழைப்பாய் கொண்டவனே !!!
நிறத்தில் இல்லையடா உணர்ச்சி...
திறத்தில் செய்யடா கிளர்ச்சி...
இழந்த இனம் வருமே மறுசுழற்சி..
வண்ணத்தை கலைத்தால் மறுமலர்ச்சி..
பல் வண்ணமாய் இருக்கும் தமிழா !!!
நல் திண்ணமாய் இருப்பது உயர்வு..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக