ஆழி குளமாகி ஏரி தரிசாகி
நீரின்றி அமையலாம் உலகு
அன்றே வீதியெங்கும் பூக்கோலம்
நாடெங்கும் நர்த்தனங்கள்
திக்கெட்டிலும் திகழ்ந்திடும் அமைதி....
இருக்கும் இடத்தில்
இல்லையென்ற விதியை
கொண்டாடும் உலகம்...
உள்ளமதில் உள்ளதை கூற
கபடமதை கலந்துரைக்கும்....
பற்றோடு பற்று வைக்க
ஏமாற்றத்தை பரிசளிக்கும்...
நேசித்து வாழ உயிரற்று போனதே மனிதம்,,,
இனி நேசித்து வாழ நிலையில்லை
ஆகவே நிலையான
மரணத்தை மட்டும் நேசிக்கிறேன்...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக