என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

வெள்ளி, 1 பிப்ரவரி, 2013

இதயத்தின் இனிப்பே.......


தமிழே , அமிழ்தே 
உதிரத்தில் உறைந்திட்ட 
உயிரே ; உனை 
நினைந்தால் தொட்ட 
காரியமும் கைதனில்...
இதயத்தின் இனிப்பே
உண்டார்க்கு சுவை ஆறு - அதில் 
உனை கொண்டார்க்கு ஏழு...
நித்தம் மனதில் தேன்சொரியும்...
கண்களில் சித்தம் 
தெளிந்து நீர் வடியும் ...
பிறந்திட்ட இச்சென்மம் 
ஏழேழு பிறவிக்கும் போதும்...
மண்ணுக்கு ஊண் உணவாகினும் 
பெயர் சொல்லும் தமிழனென்று....
எப்பொழுதிலும் உனை சூழும் வஞ்சம் 
திண்ணமே திமிறும் எனது நெஞ்சம்...
சுற்றமும்  சூழ்ச்சி உமை நெரிக்கும்  
எம் கை 'வாள்' அதை முறிக்கும் ...
என்றும் உன்னை சுற்றியே 
என் வாழ்வும் தேடலும் ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக