என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

புதன், 24 ஆகஸ்ட், 2011

தன் மான தமிழன் எங்கே !!! இன்றைய தமிழனின் நிலைமைதான் என்ன !!! ?



வந்தாரை வாழ வைத்து தான் வீழ்ந்து போனவன்.
 
விட்டுக் கொடுத்தே வீணாகப் போனவன். 

ஆண்டாண்டு காலமாக அடிமையாகவே வாழ்பவன்.

இலவச  அரிசியை வாங்கிப் பொங்கி மாராட மயிராட நிகழ்ச்சி பார்த்து மல்லாந்து படுத்துறங்கும் மீப்பெரு நல்லவன்.

வாக்களித்து வாக்களித்து வாழ்விழந்து போனவன்.எல்லாப் போலிகளையும் தவறாமல் நம்பி நம்பித் தடம் புரண்டவன்.

தன்னுடைய வரிப் பணத்தில் தன்னையே அழிக்க ஆயுதங்கள் வாங்க அனுமதிக்கும் அருமையானவன்.

ஒட்டு மொத்த உலகமும் இணைந்து தடைசெய்யப் பட்ட நச்சு எரிவாயு கொண்டு தமிழினம் ஒழிக்கும் போதும் தன்மை மாறாத தூயவன்.

துள்ளி விளையாடும் பள்ளிக் குழந்தைகள் மீது கொத்தணிக் குண்டுகள் போட்டாலும் சித்திரத்தில் மலர்ந்த செந்தாமரையாய் இருப்பவன்.

பாலியல் வல்லுறவில் கிழிக்கப் படும் கன்னித்திரைகள் கண்டும் கலங்காதவன்.

செவிலியருக்குப் பதில் வெடிகுண்டுகளே தமது உறவுப் பெண்களுக்கு மகப்பேறு பார்த்தாலும் மனம் குமுறாத மாமனிதன்.

இப்படி என்ன கொடுமை நடந்தாலும் அவன் வேறு நாட்டவன் நாம் இந்தியர் என்று உணர்ந்து கொள்ளும் அறிவாளி

அளவான தண்ணீர் கூடத் தராத பல மாநிலங்களுக்கும் அளவில்லா உதவி செய்பவன்.

தமிழன் என்றோர் இனமில்லை தனியே அவர்க்கு நாடில்லை என்று செய்ய பேருதவி செய்தவன்.
இன்னும் நீளும்... அடி வயிறு பற்றி எரிகிறது ......

எல்லாவற்றுக்கும் மேலாக யார் தமிழன் என்ற வினாவை ஒரு தமிழனையே கேட்க வைத்தவன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக