என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

புதன், 24 ஆகஸ்ட், 2011

உங்கள் பலத்தை அடையாளம் காணுங்கள்


  • உங்களை நீங்களே இகழாதீர்கள்
    அது கடவுளுக்கு எதிரான கண்டனத் தீர்மானம்!


  • உங்கள் பலத்தை அடையாளம் காணுங்கள்
  • அது கடவுளுக்குப் படிக்கிற பாராட்டுப் பத்திரம்!



  • உங்களைப் பிறரோடு ஒப்பிடாதீர்கள்
    அது உங்கள் தனித்தன்மைக்கு நீங்கள் செய்யும் அவமானம்!


  • உங்கள் பலங்கள் மீது கவனம் செலுத்துங்கள்
  • அது உங்கள் பலவீனங்களை வெளியேற்றும் ரகசியம்



  • உங்களுக்குப் பிடித்ததை விருப்பத்துடன் செய்யுங்கள்
    அது உங்கள் விசுவரூபதை வெளிப்படுத்தும் சாகசம்


  • உங்கள் மீதான விமர்சனங்களைப் பரிசீலியுங்கள்
  • அது உங்கள் வளர்ச்சிக்கு மற்றவர்கள் போடும் உரம்


  • உங்களை நீங்களே எடைபோடுங்கள்
  • அது உங்கள் வெற்றிக்கு நீங்கள் இடும் அச்சாரம்



  • உங்கள் குறைகளைக் களையுங்கள்
    அது அவற்றைக் கடப்பதற்கான முயற்சியின் அடித்தளம்


  • உங்களை நீங்களே நம்புங்கள்
  • அது உங்கள்மேல் கடவுள்வைத்த நம்பிக்கையின் அடையாளம்

  • கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக