தைத் திருநாளாம்
அதுவே
மொழியின் முதல் நாளாம் ....
நம்மினத்தின் திருநாளாம் ...
இனியும்
நம்பிக்கை கொள்கிறேன்
எம்மினமே
விழித்தெழுவாய் என !
இனாம் தன்னில் மயங்கி
பாசாங்கு பந்தத்தில்
சுருங்கிப் போன எம்மினமே ...
தரித்திரத்தில்
சரித்திரம் படைத்தது போதும்...
போலிகள் அசலாகி
நரிகள் நாடாளுவதை காண் ...
புலிகள் புற்களை தேடுவதை காண்...
சோறுடைத்த நாடு சோறுக்கலைவதை காண் ...
காண்பதற்கரிய காணாத
காட்சியெல்லாம் தாயகத்திலே...
இனி நிகழாமல்
இத்தைத் திங்களில்
பொங்கட்டும் இன உணர்வு...
ஆதித் தமிழர் புகழ் பரவட்டும்....
ஆதித் தமிழர் புகழ் பரவட்டும்....
இனியொரு யுகம் படைப்போம்
அதில் தமிழே முதலென உரைப்போம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக