காதல் கொள்ளுங்கள்
அவதாரங்கள் எடுப்பீர்
உணர்வுக்குள் அழகை உணர்வீர்
மொழியின் மேல் காதல் கொள்வீர்
இன்னொரு இதயம் உருவாகும்
அதுவும் சிறகு விரிக்கும் !
கனவுக்குள் கனவு மெய்ப்படும்
ஐம்புலன்களும் சிரிக்கும் அழும் !
ஆதலினால், தமிழ் மேல் காதல் கொள்ளுங்கள் !
எந்த வயதிலும் சிலிர்ப்பை சுகிப்பீர் !
விழித்து இருக்கையில் கனவுகள் விளையும்
உறக்கத்தில் உயிர்ப்பறவை சிறகடிக்கும்
உயிர் பிரிந்திடும் வேளையிலும்
இனிமை கொட்டும் !
சமூக சிறைகளை உடைத்திட சக்தி கொள்வீர் !
முகங்களை தெளிவீர் !
சிந்தைக்குள் மயக்கம்
செலவின்றி நிலாப்பயணம் செல்வீர்
ஆகாயத்துள் பறந்து வர அவசர சிறகு
பனித்துளிக்குள் இனிய பிரவேசம் !
விழி இமையில் புல்விரிப்பும் பூந்தோட்டமும்
ஆதலினால், தமிழ் மேல் காதல் கொள்ளுங்கள் !
மனம் வானமாய் விரியும்
விழிப்படலத்துள் மேகம் மிதக்கும்
தேகம் சிலையாகும்
சிலை தேகமாய் சிலிர்க்கும் !
மௌனம் கூட ஆர்பரிக்கும்
வாழ்வின் முரண்கள் அரண்களாகும்
துயரிலும் இதயம் பஞ்சாகும் !
ஆதலினால்
வேண்டி நிற்பீர்
ஒரு வரம் - அடுத்த பிறவியிலேனும்
பிறந்திட வேண்டும் ...
" ஒரு தமிழனாய்" என ...
ஆதலினாலே ...
தமிழ் மேல் காதல் கொள்ளுங்கள் ! தமிழ் மேல் காதல் கொள்ளுங்கள் !!!
அவதாரங்கள் எடுப்பீர்
உணர்வுக்குள் அழகை உணர்வீர்
மொழியின் மேல் காதல் கொள்வீர்
இன்னொரு இதயம் உருவாகும்
அதுவும் சிறகு விரிக்கும் !
கனவுக்குள் கனவு மெய்ப்படும்
ஐம்புலன்களும் சிரிக்கும் அழும் !
ஆதலினால், தமிழ் மேல் காதல் கொள்ளுங்கள் !
எந்த வயதிலும் சிலிர்ப்பை சுகிப்பீர் !
விழித்து இருக்கையில் கனவுகள் விளையும்
உறக்கத்தில் உயிர்ப்பறவை சிறகடிக்கும்
உயிர் பிரிந்திடும் வேளையிலும்
இனிமை கொட்டும் !
சமூக சிறைகளை உடைத்திட சக்தி கொள்வீர் !
முகங்களை தெளிவீர் !
சிந்தைக்குள் மயக்கம்
செலவின்றி நிலாப்பயணம் செல்வீர்
ஆகாயத்துள் பறந்து வர அவசர சிறகு
பனித்துளிக்குள் இனிய பிரவேசம் !
விழி இமையில் புல்விரிப்பும் பூந்தோட்டமும்
ஆதலினால், தமிழ் மேல் காதல் கொள்ளுங்கள் !
மனம் வானமாய் விரியும்
விழிப்படலத்துள் மேகம் மிதக்கும்
தேகம் சிலையாகும்
சிலை தேகமாய் சிலிர்க்கும் !
மௌனம் கூட ஆர்பரிக்கும்
வாழ்வின் முரண்கள் அரண்களாகும்
துயரிலும் இதயம் பஞ்சாகும் !
ஆதலினால்
வேண்டி நிற்பீர்
ஒரு வரம் - அடுத்த பிறவியிலேனும்
பிறந்திட வேண்டும் ...
" ஒரு தமிழனாய்" என ...
ஆதலினாலே ...
தமிழ் மேல் காதல் கொள்ளுங்கள் ! தமிழ் மேல் காதல் கொள்ளுங்கள் !!!
தமிழ்ல காதலிக்கறன்னு சொன்ன ஒரு மாதிரியா பாக்குறாங்க அண்ணா........
பதிலளிநீக்கு