என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

புதன், 19 அக்டோபர், 2011

அன்புள்ள தமிழ்ப்பெண்ணே !!!


முறத்தால் புலியடித்த வீரத்தமிழ் வம்ச பெண் நீயம்மா !

படைநடத்தும் வீரனையும் வழி நடத்தும் ஆற்றல் உனக்குள்தானம்மா !

முண்டாசு புலவனும் பாடி வைத்தானே ! நீதானே புதுமை பெண்ணம்மா !

எப்போதும் மறவாதே தமிழன்னையும் உன்வழி தோ
ன்றலம்மா !

நம் இன பெருமையை பேணிகாப்பது உன் கடமையம்மா !

பண்பிற்கும் பண்பாட்டுக்கும் இவ்வுலகில் உனக்கு நிகர் ஏதம்மா !

தேடினாலும் கிடைக்காத தேனாமிர்தம் நம் தாய் தமிழ் மொழியம்மா !

தாய்மொழியும் தமிழினமும் உன் இருவிழிகள் தானம்மா !

உன்னை போற்றிப்பாடாத சித்தனும் இல்லை கவிப்பித்தனும் இல்லையம்மா !

உன் சுயமறிந்து உன் புகழறிந்து நீயும் உனை உணர்ந்து கொள்ளம்மா !

உனை உணராமல் மதிமயங்கி செல்கிறாயே மேற்கத்தி திசையம்மா !

மதிமயங்கி சுயம்மறந்து உன் புகழழிய காரணம் நீயேதானம்மா !

இயக்குவதும் இயங்கவைப்பதும் அனைத்தும் உன் செயல்தானம்மா !

மதிகெட்ட மடையர்களின் சொல்கேட்டு உன்னை உனக்குள் வைக்காதே சிறையம்மா !

முப்பத்திமூன்று என்ன ! முழுவதையும் உனக்கே தருகிறோம் பாரம்மா !

அதற்க்கு தடையாக இருப்பது நீ கொள்ளும் பெரும் மனதயக்கமம்மா !

அஞ்சுவோர்க்கும் தயங்குவோர்க்கும் எதுவும் அசாத்தியம்தானம்மா !

அசாதாரணமானவள்  நீயல்ல ! புரிந்துகொள் நீயும்  மறதமிழ் பெண்ணம்மா !

கலங்காதே என்றும் இந்த தன்னிகரில்லா தமிழன்  உன்பக்கம் துணையம்மா !

2 கருத்துகள்:

  1. தேடினாலும் கிடைக்காத தேனாமிர்தம் நம் தாய் தமிழ் மொழியம்மா !

    அருமையான வரி...

    ஆனால் இத யாரு உணவர்வதில்லை அண்ணா.......

    பதிலளிநீக்கு