முறத்தால் புலியடித்த வீரத்தமிழ் வம்ச பெண் நீயம்மா !
படைநடத்தும் வீரனையும் வழி நடத்தும் ஆற்றல் உனக்குள்தானம்மா !
முண்டாசு புலவனும் பாடி வைத்தானே ! நீதானே புதுமை பெண்ணம்மா !
எப்போதும் மறவாதே தமிழன்னையும் உன்வழி தோன்றலம்மா !
நம் இன பெருமையை பேணிகாப்பது உன் கடமையம்மா !
பண்பிற்கும் பண்பாட்டுக்கும் இவ்வுலகில் உனக்கு நிகர் ஏதம்மா !
தேடினாலும் கிடைக்காத தேனாமிர்தம் நம் தாய் தமிழ் மொழியம்மா !
தாய்மொழியும் தமிழினமும் உன் இருவிழிகள் தானம்மா !
உன்னை போற்றிப்பாடாத சித்தனும் இல்லை கவிப்பித்தனும் இல்லையம்மா !
உன் சுயமறிந்து உன் புகழறிந்து நீயும் உனை உணர்ந்து கொள்ளம்மா !
உனை உணராமல் மதிமயங்கி செல்கிறாயே மேற்கத்தி திசையம்மா !
மதிமயங்கி சுயம்மறந்து உன் புகழழிய காரணம் நீயேதானம்மா !
இயக்குவதும் இயங்கவைப்பதும் அனைத்தும் உன் செயல்தானம்மா !
மதிகெட்ட மடையர்களின் சொல்கேட்டு உன்னை உனக்குள் வைக்காதே சிறையம்மா !
முப்பத்திமூன்று என்ன ! முழுவதையும் உனக்கே தருகிறோம் பாரம்மா !
அதற்க்கு தடையாக இருப்பது நீ கொள்ளும் பெரும் மனதயக்கமம்மா !
அஞ்சுவோர்க்கும் தயங்குவோர்க்கும் எதுவும் அசாத்தியம்தானம்மா !
அசாதாரணமானவள் நீயல்ல ! புரிந்துகொள் நீயும் மறதமிழ் பெண்ணம்மா !
கலங்காதே என்றும் இந்த தன்னிகரில்லா தமிழன் உன்பக்கம் துணையம்மா !
தேடினாலும் கிடைக்காத தேனாமிர்தம் நம் தாய் தமிழ் மொழியம்மா !
பதிலளிநீக்குஅருமையான வரி...
ஆனால் இத யாரு உணவர்வதில்லை அண்ணா.......
arumai nanba....
பதிலளிநீக்கு