என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

புதன், 19 அக்டோபர், 2011

தமிழா வாடா !!



சிலிர்த்தெழும் ஆழியென தமிழா நீயும் சீறி வாடா !!
உன் சீற்றத்தால் எதிரிகளின்  கொட்டமழித்து போடா

பசித்தாலும் புல்தின்னா புலியென புறப்பட்டு வாடா !!
உன் பாய்ச்சலால் தீமைகளை சுட்டெரித்து போடா

கட்டுக்கடங்கா காட்டாற்று வெள்ளமென திரண்டு வாடா !!
திரளாக நிற்கும் தடைகளை அடித்துக்கொண்டு போடா

போரென்றால் முன் நிற்கும் இனமென்று சொல்லி வாடா !!
எதிர்நிற்கும் பகைவனின் முதுகை புண்ணாக்கி போடா

தமிழன் போல் ஓர் இனம் இல்லை என்றே மார்தட்டி வாடா !!
அவனுக்கு இணையான ஒரு வீரனில்லை பார் அறியும் போடா !!.

என்றும் தமிழன்னையின் புகழ் ஒங்க கைகொடுக்க வாடா !!
இதை தடுக்கும் தறுக்கர்களின் கரம் கொய்து போடா

தமிழீழம் மட்டுமல்ல தமிழன் இருக்கும் இடமெல்லாம் கொடி நாட்டுவோம் வாடா !!
சாத்தியமாக்குவோம் இதை தலைவன் காட்டிய பாதையில் நில்லாமல் போடா

சாதி மதம் எதுவாயினும் தமிழனாய் ஒரு வட்டத்தில் வாடா !!
வட்டத்தின் அரணாய்  நீயும் நெருப்பாயுதம் ஏந்தி போடா .......

நம் இனம் காக்க உயிரே மயிரென வாடா !!
மரணிக்கும் தருவாயிலும் தமிழ்ப்பேசி  உயிர் விட்டு போடா..


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக