என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

திங்கள், 24 அக்டோபர், 2011

இனாம் தமிழன்


இனமான தமிழன் இருந்த காலம் போக இனாம் தமிழன் உருவெடுத்த மாயம் என்ன ..

வெற்றி சரித்திரம் படைத்த தமிழன் வெந்த சோற்றின் மீது பற்றுண்டு தரித்திரம் கொண்டதென்ன..

பகட்டில்லா பண்பாடு கொண்ட தமிழன் பகட்டிற்காக மானமிழந்து போனதென்ன ..

விஞ்ஞானமும் வியந்து போகும் மெய்ஞானம் கொண்ட தமிழன் தறிகெட்டு போனதென்ன..

வேங்கைக்கும் வியர்த்து போகும் வீரத்தமிழன் வரண்டு போய் வழுவிழந்ததென்ன ..

இனமே அழிந்தாலும் இன்னிசை கேட்டு இனிமையாக பொழுதை கழிப்பதென்ன ..

உயிரை கொடுத்து இனம் காக்க அவசியமல்ல சிறு உணர்வு மட்டும் கொண்டாலென்ன ..

உணர்வு கொண்டால் தமிழனை எதிர்த்து சீண்ட பல கயவன் நினைப்பானா என்ன ..

இத்தனை கூறும் பொழுதிலும் என்மேல் கோபம் கொள்ளும் தமிழனுக்கு உண்மை கசப்பதென்ன ..

போராட்டமே வாழ்க்கை என்பதல்ல போராடாமல் வாழ்கையே இல்லை புரியாமல் போனதென்ன..

இத்தனை  "என்ன "உபயோக படுத்திய பொழுதிலும் இந்நிலைமை மாற  பதில் கிடைக்காமல் போவதென்ன...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக