என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

ஞாயிறு, 9 அக்டோபர், 2011

உலகம் உங்கள் கையில்

கரங்களை உரங்களாக கொண்டு உழையுங்கள்                                                                                                                                           ....உலகம் உங்கள் கையில்

பதிப்பகத்தாரை போல அவ்வபோது
புதுப்பித்து கொள்ளுங்கள் உங்கள் நினைவுகளை
                                                                              ....உலகம் உங்கள் கையில்

தன்னம்பிக்கை கூட்டங்களுக்கு  தவறாமல்

எடுத்து செல்லுங்கள் உங்கள்  அவநம்பிக்கைகளை                                                                                                                                 ...உலகம் உங்கள் கையில்

இழப்புகளுக்காக ஒரு இடத்தை எப்பொதும்

ஒதுக்கி வையுங்கள் உங்கள் இதயத்தில்                
                                                                             ....உலகம் உங்கள் கையில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக