அய்யாவின் நூற்றிநான்காவது அவதார திருவிழாவிற்கு இந்த சிறுவனின் சமர்ப்பணம்...
உதயமும் அஸ்தமனமும் ஒரே தினத்தில் நிகழ்ந்த அற்புத மனித சூரியனே !
அடங்கா வேங்கை கூட்டத்தை அன்பால் அடக்கி போன மனித தெய்வமே !
அழுதாலும் தொழுதாலும் இனி கிடைக்காது உன் போல் அரிய பொக்கிசமே !
நின் பாதம் மட்டுமல்ல ! நீ உதித்த திசை நோக்கி வணங்கி தொழுவோமே !
உன்னை கண்டு வியந்து போனான் வங்கத்து மைந்தனே !
நீ சுற்றிய சிலம்பில் சிதைந்து போனது சிறுநரி கூட்டமே !
தேசம் எனது சுவாசம் எனதுரைத்த எம் தமிழகம் கண்ட தங்கமே !
விவேகமுள்ள உனது வீரத்திற்கு நிகரில்லை காட்டு சிங்கமே !
நீ இன்று இருந்திருந்தால் பெற்றுருப்போம் தனி ஈழமே !
அய்யா நின் பொறுமைக்கு இணையில்லையே கடல் ஆழமே !
தீண்டாமைக்கு முதன் முதலில் இரும்புக்கரம் தொடுத்த மனித நேய மாந்தனே !
தமிழனுக்கும் வீரம் ! தன்மானம் உண்டு !என உன்னை கண்டு உணர்ந்தான் வெள்ளையனே !
அறம் காத்து ! வீரம் விளைத்து தேசியம் காத்த செம்மலே !
உன்னை நேரில் கண்டிருந்தால் எங்களுக்கு கிடைத்திருக்கும் இப்பிறவி பாக்கியமே !
நீ விட்டு போன பணியை தவறாமல் செய்து முடிப்போம் !!!! "" இது உன் மேல் சத்தியமே""

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக