என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

ஞாயிறு, 9 அக்டோபர், 2011

நவீன புரட்சியாளர்கள்

புரட்சியாளர்கள் என்ற போர்வைக்குள் வெறும் வறட்சியாளர்களே அதிகம் இணையத்தில் ..
வறட்சியான சிந்தனைக்கு இவர்கள் போற்றி கொள்ளும் போர்வை புரட்சியாளர்கள் ..

சொன்னானே " சே " என்ற புரட்சியாளன் சாகும் தருவாயில் என்னை சுட்டு விடுங்கள் என்று..
இவர்கள் செய்வார்கள் புரட்சி இணையத்தில் அமர்ந்து வாயில் கண்டதை மென்று !!
இவர்கள் செய்யும் வறட்சி !! மக்களை கொண்டு போகாதே நல்ல வழியில் சென்று !!
இவர்கள்  ஒற்றை சிந்தனையுடன் கூடி  "நல்ல மனிதர்களை சாடி பிழைப்பார்களே" இன்று !!
இவர்கள் ஏமாற்றமடைந்த மனதின் கழிவுகளை கொண்டு வந்து கொட்ட இணையமே அன்று !!
இனியும் பொய்யாக தோற்றமளிக்கும் கொள்கைகளின் பின் சென்றால் செய்து விடுமே மக்களை கொன்று !!
புரட்சியாளனுக்கும் வறட்சியாளனுக்கும் அடையாளம் கண்டு நம் இனத்திற்கு இருப்போம் அரணாய் நின்று !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக