என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

செவ்வாய், 18 அக்டோபர், 2011

எவரும் இருக்க முடியாது.....

 முன்பெல்லாம் யாரைச் சந்தித்தாலும் அவரிடமுள்ள நல்ல விஷயங்கள், திறமைகள் ஆகியவற்றைக் கவனிப்பதோடு எனக்கு உடன்படாத குணாதிசயங்கள் இருந்தால் அதைக் கூர்ந்து கவனித்து அதைப் பற்றியே சிந்தித்து, அவரை விட நான் நல்லவன் என்ற தம் பட்டம் அடித்துப் பல நேரங்களை வீணடித்துள்ளேன். தற்போதைய புத்திக் கொள்முதலால் இப்போதைக்கு என் நம்பிக்கை நூறு சதவீதம் நல்லவனாக யாருமில்லை, நானுமில்லை, எவரும் இருக்க முடியாது.....

1 கருத்து: