உச்சபட்ச எதிர்பார்ப்பின்
ஒருவிதமான ஏகாந்த நிலை...
நரம்பு மண்டலங்ககளின் இடம் மாற்றம்
தருணத்தில் நிகழும்....
இதயத்தின் துடிப்பு
மூளையை சலவை செய்யும்....
கண்களில் சுரக்கும் நீர்
அடிபாதத்திலும் சுரந்து
நடையில் பிறழ செய்யும்...
நினைவில் தங்கிய நிகழ்ந்து போனதை
நிகழப்போகும் நிகழ்வுடன் ஒப்பிட்டு
நிகழாத கற்பனையை
தருவிக்கும் இந்த தவிப்பு........
மிகைப்பட்ட உணர்ச்சியாய்
உள்மனதின் கிளர்ச்சியாய்
வருகையின் வாசலாய்
இழப்பின் இறுதியாய்
உருவெடுக்கும்....
நடவாத ஆசையில் உருவெடுப்பதல்ல
முடிவெடுத்த ஆசை நிகழாத போது நிகழும்
தவிப்பு....
தவிக்காத உயிர்கள் உணர்வற்றவையே,,,,

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக