புத்தாண்டே...
வாவென அழைக்கிறேன் உன்னை..
தமிழன் நான் என்ற பொழுதும்
ஆங்கிலத்தான் அமைத்த
உன்னை நம்பியே எம் பிழைப்பு...
ஆகவே
ஆங்கிலப் புத்தாண்டே
வேறு வழியின்றி அன்புடன்
அழைக்கிறேன் உன்னை ...
உன்னை குறை கூற ஒன்றுமில்லை...
ஆதித்தமிழன் கண்ட எம்மோழி....
இன்று முளைத்த உனக்கா புரியும்...
எம்மீது பிழையுண்டு....
எம்மொழியும் எம்மினமும்
வந்தாரை வாழவைத்தே பழகியது....
"முற்றத்து முல்லை மணக்காது"
என்ற மொழிக்கு நீயே சாட்சி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக