தயவுசெய்து என்னை
விட்டுவிடுங்கள்....
என்னால் உங்களுக்கு
ஆகப் போவது ஒன்றுமில்லை...
நான் உங்களை ஒரு பொழுதும்
சிறப்பிக்க போவதில்லை...
ஆதலால் அச்சமே,
உணர்வில் முதன்மையான நீ
தயக்கமேனும் உன் தோழனை
அழைத்து செல் என்னைவிட்டு...
அறியாமை அகலும்
நீவிர் நீங்கும் போது.............
எனது
சூழ்நிலையே நீ
உற்பத்தி செய்யும் இடர்களில்
தன்னம்பிக்கை தவறிப் போகாது,
உன்னையும் வெளிநடப்பு செய்வேன்..
எம்
நெஞ்சில் நஞ்சாய் பதிந்த
ஏமாற்றத்தின் அடிச் சுவடே
அகன்று விடு என்னை விட்டு.
இனி எந்நிலையிலும்
எனை சந்திக்க சிந்தை கொள்ளாதீர்...
பொய்களும் புரட்டுகளும் எனை சூழாது
இனி நிகழப் போவது நிதர்சனம் மட்டுமே...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக