என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

புதன், 4 ஜனவரி, 2012

உடையுமா !!!

தண்ணீரை காக்க கட்டிய அணை-இன்று
அதை உடைத்தால் வரும்  விணை...

காடு கழனிகளை விற்று கட்டினான் பென்னி - இன்று
கேரள அரையர்கள் நமக்கு காட்டுகிறான் தண்ணி..

ஆடி அசைந்தாடி வரும் கேரள யானை பிந்தி-அதன் முன்
பாயும் வேங்கைகளாய் அணையை காப்போம் முந்தி....


அணையை உடைக்க நீட்டினாய் கரம் - தொடர்ந்தால்
தமிழன் கொய்வான் உன்னுடைய சிரம்....

அணை உடைந்தால் பாரதம் உடைவது உறுதி - அதற்கு 
சிந்துவோமே கடைசி துளி வரை தமிழனின் குருதி...

அணை பெயர் சொல்லி விரிக்காதே அரசியல் கடை - அதில்
தகர்ந்து போகும் நீ ஏற்படுத்தும் மத்திய தடை...

எங்கும் பறந்து விரிந்தது தமிழ் இனம் - பிரிவுகளும்
முறிவுகளும் கடந்து பரவி வீசுமே எம் இன மணம்...

இனி கையை ஏந்த மாட்டோம் தண்ணீருக்காக யாசகம்-நீ 
புரிந்து கொள் இதுவே  எம்மினம்  கூறும் கடைசி வாசகம்...

4 கருத்துகள்:

  1. சிறப்பான வரிகள் பாராட்டுகள்

    தமிழ்த்தோட்டம்
    www.tamilthottam.in

    பதிலளிநீக்கு
  2. nallaaruku annaa..editla poi vinai spelling matum maathirunga..

    பதிலளிநீக்கு
  3. கருத்தும் வரிகள் படிக்கவும் அருமையா இருக்கு

    பதிலளிநீக்கு
  4. இந்த அறிவால் சிறியவனை பாராட்டியமைக்கு நன்றிகள் பல....

    பதிலளிநீக்கு