அன்புள்ள சகோதரனுக்கு !!!
தம்பி நீ இருக்க எமக்கு முப்படை எதற்கு !
என்றும் நான் இருப்பேன் பக்கத்துணை உனக்கு !
அடங்கா அரிமாவின் பெருங்சக்தி உனக்குள் இருக்கு !
உன் சக்தி கொண்டு அகிலத்தை உன் சட்டைப்பையில் போட்டு சுருக்கு !
எதிர்த்து எமன் வந்தாலும் அடித்து நொறுக்கு !
அலைபாயும் உன் மனதை வெற்றி பாதையில் திருப்பு !
வெற்றி பாதையில் சிறுநரிகள் வந்தால் நீயும் வைத்துவிடு நெருப்பு !
நல்லவன் போல் நடித்திடும் துரோகி நாய்களின் வாலை ஓட்ட நறுக்கு !
எந்த நிலை வந்தாலும் ஏற்றாதே உன் தலையில் ஆணவ செருக்கு !
எக்காரணமும் பெண்ணை தூற்றாதே ! உனக்கு பிடித்துவிடும் கிறுக்கு !
உன் அளவில்லா அன்பை கொண்டு உறுதியான இரும்பையும் உருக்கு !
அறிவாயுதம் கொண்டு உன் சுற்றத்தின் வளம் பெருக்கு !
புறங்காட்டா வீரமும் ,பெருங்கருணையும் நீயும் கொண்டால் அதுவே உன் சிறப்பு !
கலங்காதே எதற்கும் ! அசாதாராணமானது உனது பிறப்பு !
எடுத்து காட்டாக இருக்க வேண்டும் சரித்திரத்தில் உன் இறப்பு !
தலைவன் சென்ற வழி கண்டு தனி தமிழீழம் பெறுவது உன் பொறுப்பு !
எத்தனை பிறவி எடுத்தாலும் உனக்கு கிட்டாதே தமிழனாக பிறக்கும்
வாய்ப்பு !
தயங்காதே ! இந்த தன்னிகரில்லா தமிழன் என்றும் உன் பக்கம்
இருப்பு.....!!!!!!!!!!!
வெற்றி பாதையில் சிறுநரிகள் வந்தால் நீயும் வைத்துவிடு நெருப்பு !
பதிலளிநீக்குநல்லவன் போல் நடித்திடும் துரோகி நாய்களின் வாலை ஓட்ட நறுக்கு !
எந்த நிலை வந்தாலும் ஏற்றாதே உன் தலையில் ஆணவ செருக்கு !
எக்காரணமும் பெண்ணை தூற்றாதே ! உனக்கு பிடித்துவிடும் கிறுக்கு !
உன் அளவில்லா அன்பை கொண்டு உறுதியான இரும்பையும் உருக்கு !
அறிவாயுதம் கொண்டு உன் சுற்றத்தின் வளம் பெருக்கு !
அருமையான வரிகள்.....
super anna
பதிலளிநீக்கு