என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

செவ்வாய், 13 செப்டம்பர், 2011

பதறாமல் செய்யும் காரியம் சிதறாது..


"இது புத்தர் வாழ்கையில் நடந்தது .
ஒரு முறை புத்தரும் அவரது சீடர்களும் ஒரு கிராமத்தை கடந்து கொண்டிருந்தார்கள் .அப்போது புத்தருக்கு தண்ணீர் தாகம் .ஒரு சீடனிடம் தண்ணீர் கேட்டார்.அவன் தண்ணீர் எடுத்து வர அருகிலுள்ள குளத்துக்கு ஓடினான் .அங்கே குளக்கரையில் கிராமத்து வாசிகள் துணி துவைத்து  கொண்டிருந்தார்கள்.அதனால் குளம் கலங்கி இருந்தது,அதிலிருந்து தண்ணீர் எடுத்து போய் கொடுக்க சீடனுக்கு மனமில்லை.ஓடி வந்து புத்தரிடம் பார்த்ததை சொன்னான்.உடனே புத்தர் 'பரவாயில்லை சிறிது நேரம் கழித்து போய் எடுத்து கொள்ளலாம் ' என்று சொல்லி அங்கிருந்த மர நிழலில் அமர்ந்து கொண்டார்.

ஒரு மணி நேரம் கடந்திருக்கும் ,புத்தர் சீடனை அழைத்து மீண்டும் குளத்துக்கு சென்று தண்ணீர் எடுத்து வர சொன்னார்.சீடனும் குளத்துக்கு சென்றான்,குளக்கரை காலியாக இருந்தது,கிராமத்து வாசிகள் துவைத்து முடித்து சென்றிருந்தார்கள் .குளத்தில் கலங்கலும் அடங்கி தண்ணீர் தெளிந்து இருந்தது.சீடன் தெளிந்த தண்ணீரை எடுத்து கொண்டு புத்தரிடம் சென்றான்.
"ஒரு மணி நேரம் முன்பு பார்த்த குளம் போலவே இல்லை,மிகவும் தெளிந்து இருந்தது " என்றான் குருவிடம்.அதற்கு புத்தர் அவனிடம் ,
"மனித மனமும் இப்படித்தான் ,பதட்டத்தில் இருக்கும் பொழுது கலங்கியிருக்கும் .அந்த நேரம் நாம் எந்தக் காரியமும் செய்ய கூடாது.சிறிது நேரம் அமைதியாக இருந்தால் மனம் தெளிவடையும்.அப்பொழுதுதான் நம் பணிகளை செய்ய வேண்டும்" என்றார்..  

பதறாமல் செய்யும் காரியம் சிதறாது..

4 கருத்துகள்: