என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

திங்கள், 26 செப்டம்பர், 2011

ரத்தம் குடிக்கும் புத்த பூமியே !!!!!!!

ரத்தம் குடிக்கும் புத்த பூமியே!

தாய் தமிழகத்தில் இருந்து மானங்கெட்ட தமிழன் எழுதுகிறேன்......

எங்கள் உயிரென்ன நீ மழித்துவிட்ட மயிரென்று நினைத்தாயோ?

சாவு எம்மினத்திற்கு புதிதல்ல !


நாங்கள் செத்து செத்தே சரித்திரம் செய்தவர்கள்.....


பதறாதவர்கள் கூட சிதறிப்போவார்கள்.....


எம் ஈழ நாட்டு ஓலம் கேட்டு......


இந்த ஐ.நா என்ன......அந்த ஆண்டவனே அழுதுதான் போனான்.....


அங்கே நடந்த பூலோக மாற்றம் கண்டு......


"ஒருமுறை பிறந்தவனெல்லாம் ஒரேமுறை செத்துப்போகிறான்"


திரும்பவும் படி மேலே சொன்னதை......!!!!!!!!


பாவம் எம் தலைவன்..... பிறரைப்போல ஒருமுறைதான் அவனும் பிறந்தான்.....


ஏய் சிங்கள நாயே!!


நீ இன்னும் எத்தனை முறைதான் அவனை சாகடிப்பாயோ தெரியாது......


திரும்பி வருவான் உனக்கு புரியாது!!!!


"தமிழீழம்"
என் தாத்தன் காலத்து கனவு.......
என் தகப்பன் காலத்தில் நிலவு......
என் தலைமுறையில் விழுந்த எழவு......
இனிமேல்தான் தெரியும் விளைவு......


உலக சமுதாயமே இதை கேள்!!!!!
என் பிள்ளைக்காலத்தில்.....


இனி மே மாத விடுமுறை கழிக்க செல்வோம் தமிழீழ தேசம்!!!!


அங்கே உயரே பறக்கும் புலிக்கொடி......


உள்ளே வீற்றிருக்கும் விடுதலை புலி.......


வணங்கிவிட்டு வருவோம் விதிமுறைப்படி !!!!


ஈழ தேச விடுதலைக்காக உயிர் துறந்த போராளிகளையும்,எம் தாய் வழி சொந்தங்களையும்



பாதம் தொட்டு வணங்குகிறேன்.!!

இழப்பதை இழந்தாச்சு .........இனி ஈழப்பாதை எமதாச்சு........ 

                                   
                                                                           வெளியீடு..பாசறை பிரகாசு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக