என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

ஆசைகளை அடக்க விட்டால் ஆபத்துகள் வரும்...

அந்த காலத்தில் ஆப்பிரிக்காவில் குரங்குகள் அதிகம் .அவை ஊருக்குள் புகுந்து தொல்லைகள் தரும்.அதனால் மக்கள் அவற்றை பிடித்து காட்டுக்குள் போய் விட்டு விடுவார்கள்..குரங்குகளை வேட்டையாடி கொல்வது எளிது .ஆனால் உயிருடன் பிடிப்பது சிரமம்.அவற்றை உயிருடன் பிடிக்க அவர்கள் ஒரு தந்திரம் செய்வார்கள்..
தேங்காயை எடுத்து அதில் சிறிய துளை போட்டு விடுவார்கள்..சிரமப்பட்டு ஒரு கையை நுழைக்கும் அளவுக்கு அந்த துளை இருக்கும்.துளைக்குள் கொஞ்சம் சோற்றை வைத்து விடுவார்கள்..
குரங்குகளுக்கு சோறு என்றால் மிகவும் பிடிக்கும்.தேங்காயின் ஒரு முனையை கயிற்றால் இணைத்து மறைவாக வைத்து விடுவார்கள் ..இது போன்று பல தேங்காய்களை அங்கங்கே போட்டு வைத்து விடுவார்கள்.
குரங்குகள் வரும் சாதத்தின் வாசனை அவற்றை இழுக்கும்.உடனே சாதம் இருக்கும் ஓட்டைக்குள் கை விடும் ,சோற்றை எடுத்து கையை கெட்டியாக மூடி கொள்ளும்,ஆனால் அவற்றால் அந்த துளை வழியே கையை எடுக்க முடியாது...காரணம் கையில் சோற்றை கெட்டியாக பிடித்திருப்பதுதான்.சோற்றுடன் மூடியிருக்கும் கையை திறந்து ,விரல்களை சுருக்கி அவற்றால் கையை வெளியே எடுத்து விட முடியும்.ஆனால் ,சோற்றின் மேல் உள்ள ஆசையால் அவை அப்படி செய்யாது.குரங்கு பிடிப்பவர்கள்  எளிதாக கையிற்றை இழுத்து குரங்குகளை பிடித்து விடுவார்கள்..
நம்முடைய அதிக ஆசைகள்தான் பிரச்சனைகளுக்கு காரணம்..தேவையற்ற ஆசைகளை புறக்கணிப்போம் .ஆசைகளை அடக்க விட்டால் ஆபத்துகள் வரும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக