என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

புதன், 28 செப்டம்பர், 2011

சுதந்திரம் என்பது மஞ்சமா


சுதந்திரம் என்பது மஞ்சமா? -நாம்


சிந்திய இரத்தங்கள் கொஞ்சமா?

வீரர்க்கு எம்மிடை பஞ்சமா? நாம்

வெகுண்டெழில் எதிரிகள் மிஞ்சுமா?

சுதந்திரம் வேண்டிநாம் கூடினோம்-கையில்

ஆயுதம் ஏந்தி ப்போராடினோம்

சுடும் நெருப்பாகவே மாறினோம் நம்மை

சூழ்ந்த பகைவரை சாடினோம்!

வீரர்கள் சாவது இல்லையே -விழி

நீரினை சிந்தாதே அன்னையே

போரில் மடிவதை எண்ணியே -தமிழ்

போராளி மகிழ்வது உண்மையே!

அன்னையே இன்னமும் கலக்கமா?-இனி

மேலொரு துயரில்லை உனக்கம்மா

அந்நியன் இனி இங்கு யாரம்மா? மகன்

அரணாய் இருக்கிறான் பாரம்மா!

புலிகள் பசித்தாலும் புல்லையே -ஒரு

போதும் புசிப்பது இல்லையே

உலகினைத் தந்தாலும் அள்ளியே -நம்

உரிமைகள் கைவிடார் உண்மையே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக