என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

புதன், 28 செப்டம்பர், 2011

கயமைகளை எதிர்த்து வெல்லல் வேண்டும் அம்மா


பெண்களுக்குச் சொல்லுகின்றேன் அன்பு செய்து


பெருமையுடன் மனித குலம் காத்து நிற்கும்

வண்மை கொண்ட நீங்கள் இங்கு அடிமையாக

வாழுவதில் நியாயம் இல்லை புரிந்து வாழ்வீர்

உண்மை இல்லாக் கணவனையும் உவந்து போற்றி

உயர் வாழ்க்கை வாழ்வது வாய்ப் போலி செய்து

கண்மணியாய் அவனையுமே காத்து நிற்கும்

காவியத்துப் பெண்கள் அல்ல !! 

உயிர்கள் நீங்கள்


உங்களுக்கும் உடல் உண்டு !! உணர்ச்சி உண்டு !!

உள்ளுக்குள் எத்தனையோ ஆசை உண்டு

தங்களையே புரியாத தடியரோடே

தான் வாழ்தல் நெறி என்ற மடமை தன்னை

புண்களைப் போல் கொண்டு நீரும் வாழ்ந்திருத்தல்

பொய் மடமை கோழைத்தனம் புரிவீர் நீரே

கண்கள் என்று உம்மை இங்கு புரிந்து கொள்ளா

கயமைகளை எதிர்த்து வெல்லல் வேண்டும் அம்மா....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக