என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

இலக்கு இல்லாத அதிபல திறமை இருந்தென்ன லாபம்..

இது மகா பாரதத்தில் நடந்த சம்பவம் ..

பாரத போர் உச்சக்கட்டமாய் இருந்த நேரம்..போரில் வெற்றி தோல்வி நிர்ணயிக்க முடியாத நேரமது.....
பகவான் சிறி கிருட்டினர்  இதை பற்றி ஆழ்ந்த சிந்தனை கொண்டிருக்கும் நேரத்தில் அவ்வழியே மகா பலம் பொருந்திய ஒரு வீரன் சென்று  கொண்டிருந்தான்..கிருட்டினர் அவனை அழைத்து அவனை பற்றிய விவரம் கூறுமாறு வினவினார்..
அவன் தான் ஒரு மாபெரும் வில்வித்தை காரனென்றும்  ..ஒரே அம்பில் பல நூறு பேரை கொள்ளும் சக்தி  படைத்தவன் என்றும் பெருமை பட கூறினான்,,கிருட்டினரும் அவனை பரிசோதிக்க வேண்டி அவனை அவன் திறமையை தன்னிடம் காட்டுமாறு பதிலுரைத்தார்..
அவன் உடனே ஒரு மரத்தை காட்டி ஒரே அம்பில் இந்த மரத்தில் உள்ள அத்தனை இலைகளையும் கொய்து காட்டுகிறேன் என்று சவால் விடுத்தான்..அதற்குள் கிருட்டினர் அம்மரத்திலிருந்து இரு இலைகளை கீழே விழ செய்து தன் காலுக்கடியில் மறைத்து கொண்டார்..அவனும் அம்பை எய்தான்..

அவ்வம்பு மரத்திலுள்ள அனைத்து இலைகளையும் கொய்து முடித்து கிருட்டினரின் காலுக்கடியில் பாய்ந்து கீழே உள்ள இலைகளையும் கொய்து முடித்தது..
அவனின் வில் வித்தையை கண்டு  கிருட்டினருக்கோ மகா ஆச்சர்யம் ..அவனை பார்த்து நீ யார் பக்கம் போர் புரிய போகிறாய் என்று கேட்டார்..

 அதற்கு அவனோ எனக்கு பாண்டவர் ,கௌரவர்கள் இரு அணிகளில் எந்த அணி தோல்வி நிலையை நோக்கி செல்கிறதோ அந்த அணியின் பக்கம் சென்று விடுவேன் என்றான்..
அதற்கு கிருட்டினர் இரு பக்க தோல்வி நிலைக்கும் நீ போரிட்டால் எவ்வாறு போர் முடிவடையும் என்று சொல்லி முடிக்கும் முன்,,
அவன் கூறினான் அது எனக்கு தேவையில்லை என் திறமையை காட்டுவதே என் வேலை என்று இறுமாப்புடன் கூறினான்..
 
கிருட்டினர் உடனே தனது விசுவரூபம் காட்சி அளித்து அவனுக்கு தான் யார் என்பதை உணர்த்தி அவனிடம் ""உனக்கு அதிபல திறமை இருந்தாலும் உன் திறமை சரியான ஒரே திசையில் வழியில் செல்ல வில்லையெனில் அது உனக்கும் உலகுக்கும் பிரயோசனம் இல்லை ""என்று உணர்த்தி அவனுக்கு சொர்க்கலோக பதவி அளித்து மோட்சம் அடைய செய்தார்,,,

இலக்கு இல்லாத எந்த ஒரு சக்தியும் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் கேடு ...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக