என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

புதன், 14 செப்டம்பர், 2011

நம்புங்கள்

நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் .

நாட்டின் அடிமை விலங்கு தெறிக்கும்.

பாரில் தமிழ் மண் வீரம் படைக்கும் .

பகைவன் ஓடும் செய்தி கிடைக்கும்.

போரில் வெற்றி முரசு முழங்கும்.

புலிகள் கழுத்தில் மாலை குலுங்கும்..


புது சரித்திரம்  தமிழினம் படைக்கும் .

என் தமிழன்னையின் புகழ் ஓங்கும் .

அதில்  என் மனம் மயங்கும் .

இது  நடக்கும் வரை என் இதயம் நில்லாது இயங்கும்.

1 கருத்து: