என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

வியாழன், 25 ஆகஸ்ட், 2011

இந்த மாமனிதரை யாரென்று நினைவுள்ளதா !!!

ஜி.டி. நாயுடு (மார்ச் 231893 - 1974) என்று பரவலாக அறியப்படும் கோபால்சாமி துரைசாமி நாயுடு தமிழகம் தந்த அறிவியல் மேதைகளுள் ஒருவர். விவசாயத்தில் எண்ணற்ற ஆராய்ச்சிகளை செய்தவர்.
நாயுடுவின் அறிவுத்திறன், அவருடைய தாராள மனப்பான்மை, எளியவர்க்கு உதவும் நற்குணம் ஆகியவற்றை பல தலைவர்கள் பாராட்டியுள்ளனர்.
‘இவர் தமிழகத்திற்கு ஒரு நிதி. இவரது புகழ் உலகெங்கும் பரவ வேண்டும்’ என்றார் 
‘நாயுடுவின் அறிவை நம் சமுதாயம் முழு அளவில் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அவருடைய கண்டுபிடிப்புகள் ஒரு அளப்பரியா மதிப்புடைய கருவூலங்கள்’ என்றார் 
'கோவை வாசிகள் தங்களுடைய கல்வியிலும், முன்னேற்றத்திலும் மிகுந்த அக்கறை கொண்டிருக்கும் நாயுடுவை கண்டு பெருமை கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட மனிதருடன் வசிக்க நாம் எவ்வளவு பெருமை கொள்ள வேண்டும்’ என்று மனம் திறந்து பாராட்டினார் 
அவினாசி சாலையில் அமைந்துள்ள கோபால் பாக்கில் அமைக்கப்பட்டுள்ள நிரந்தர பொருட்காட்சி இன்றும் அவருடைய அறிவுத்திரனை இன்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன!
இவரை பற்றி முழுமையாக அறிந்து கொள்ள இங்கே சொடுக்குங்கள் 

புதன், 24 ஆகஸ்ட், 2011

தமிழன் வீரம்

வீரம் எங்கள் குல தொழிலடா !

போரென்றால் முன் நிற்கும் இனமடா !

பார்த்தாலே வீரம் பிறக்குமடா !

பார்வையில் பல அர்த்தம் இருக்குமடா !

பதுங்கி பின் பாயுமடா !

அண்டியோற்கு உயிரை கொடுக்குமடா !

எதிர்த்தோரின் உயிரை எடுக்குமடா !

குணத்தில் புலிகள் நிகரடா !

கூடி நின்றால் புரட்சி வெடிக்குமடா !

குள்ளநரி கூட்டத்தை ஒழிக்குமடா !

நாம் ஒன்று சேர்ந்தால் பூகம்பம்தானடா !

நம் இனத்திற்கு நிகர் இவ்வுலகில் ஏதடா !

வென்றவன் எவனும் பயம் கொள்வதில்லை .




மரணத்தை கண்டு எல்லோருக்கும் பயம்.

எல்லா பயங்களும் மரணத்தில் முடிகின்றன .

ஒவ்வொரு மரணமும் நமக்கு எச்சரிக்கை .

நாமே சாகும் அவலத்தில் ஒவ்வொரு சாவிலும் அவதி 

அப்பொழுதைய அழுகை நமக்காகவே !!!!

பிரார்த்தனை கோவில்கள் மதங்கள் அனைத்துமே .

மரணம் மட்டும் இல்லையெனில் மறைந்து போகும் .

மரணத்தை புரிந்தவன் வென்றவனாகிறான்......

வென்றவன் எவனும் பயம் கொள்வதில்லை .

பயம் கொள்ளாதவனுக்கு மரணமில்லை ."



தாய்பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்!

தமிழே! உயிரே! வணக்கம்!
தாய்பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்!

அமிழ்தே! நீ இல்லை என்றால்
அத்தனையும் வாழ்வில் கசக்கும்! புளிக்கும்!

தமிழே! உன்னை நினைக்கும்
தமிழன் என் நெஞ்சம் இனிக்கும்! இனிக்கும்!

அமிழ்தே! உன் எழில் நினைந்தால்
ஆயிரம் பூக்கள் சிரிக்கும்! சிரிக்கும்!

தமிழே! நீயேஎன் இயக்கம்!
தாய்நீ துணைஎன் வழிக்கும்! நடைக்கும்!

அமிழ்தே! நீதரும் இன்பம்....
அடியேன் வாழ்வில்வே றெங்கே கிடைக்கும்?

தமிழே! இன்றுனைப் பழிக்கும்
தறுக்கன் உலகில் இருக்கும் வரைக்கும்

அமிழ்தே! நீவாழும் மண்ணில்
அனலே தெறிக்கும்! அனலே தெறிக்கும்!

தமிழே! உனக்கேன் கலக்கம்?
தாயே! பொறம்மா முழக்கம் வெடிக்கும்!

அமிழ்தே உனைஎவன் தொட்டான்?
அவனை என் கைவாள் அழிக்கும்! முடிக்கும்!

நிரந்தர பயணம்

நிரந்தரமான உறக்கத்தை நோக்கிய பயணத்தில் நான் !

இடையில்தான் எத்தனை எத்தனை அனுபவங்கள் ,

கண்ணீராக ,புன்னகையாக ,வலியாக !!

எல்லாம் அவன்(இறைவன்)செயலென நினைக்க முடிய வில்லை -

எனினும்

நினைக்கிறேன் எல்லாம் அவனவன் செயல்தானென்று !!!

உங்கள் பலத்தை அடையாளம் காணுங்கள்


  • உங்களை நீங்களே இகழாதீர்கள்
    அது கடவுளுக்கு எதிரான கண்டனத் தீர்மானம்!


  • உங்கள் பலத்தை அடையாளம் காணுங்கள்
  • அது கடவுளுக்குப் படிக்கிற பாராட்டுப் பத்திரம்!



  • உங்களைப் பிறரோடு ஒப்பிடாதீர்கள்
    அது உங்கள் தனித்தன்மைக்கு நீங்கள் செய்யும் அவமானம்!


  • உங்கள் பலங்கள் மீது கவனம் செலுத்துங்கள்
  • அது உங்கள் பலவீனங்களை வெளியேற்றும் ரகசியம்



  • உங்களுக்குப் பிடித்ததை விருப்பத்துடன் செய்யுங்கள்
    அது உங்கள் விசுவரூபதை வெளிப்படுத்தும் சாகசம்


  • உங்கள் மீதான விமர்சனங்களைப் பரிசீலியுங்கள்
  • அது உங்கள் வளர்ச்சிக்கு மற்றவர்கள் போடும் உரம்


  • உங்களை நீங்களே எடைபோடுங்கள்
  • அது உங்கள் வெற்றிக்கு நீங்கள் இடும் அச்சாரம்



  • உங்கள் குறைகளைக் களையுங்கள்
    அது அவற்றைக் கடப்பதற்கான முயற்சியின் அடித்தளம்


  • உங்களை நீங்களே நம்புங்கள்
  • அது உங்கள்மேல் கடவுள்வைத்த நம்பிக்கையின் அடையாளம்

  • சாதியை ஒழிக்க வேண்டும் கத்துபவர்களே

    சாதியை ஒழிக்க வேண்டும் கத்துபவர்களே !! உரக்க கத்துங்கள் இலங்கை நோக்கி !!
    தன்மானம் உள்ளவன் தமிழன் என்று பிதற்றுபவர்களே !! தமிழன் பிடரியில் கோடாலி வைத்திருப்பதை கவனியுங்கள் !!
    பகுத்தறிவு பேசும் அறிவாளிகளே !! உங்கள் அண்ணாகயிறு அவிழ்ந்து போவதை பிடியுங்கள் !!
    ஆன்லைனில் மட்டும் வீரம் பேசும் வீர தமிழர்களே !! உன் நீர்த்து போன வீரத்தை சிங்களனிடம் காண்பியுங்கள் !!

    தன் மானம் உள்ள தமிழர்களே !!! தமிழச்சிகளே !! வெட்டி விவாதத்தை புறக்கணியுங்கள் !!
    தமிழினம் போல ஒரு இனம் இல்லை !! தமிழன் போல ஒரு தரணியில் வீரன் இல்லை நிருபியுங்கள் !!
    சாதி ,மதம் ,கடந்து தமிழனை தலை நிமிர செய்குவோம் !! இதில் பிரிவினை செய்யும் புல்லுருவிகளை வேரோடு அழிப்போம்!!

    தன் மான தமிழன் எங்கே !!! இன்றைய தமிழனின் நிலைமைதான் என்ன !!! ?



    வந்தாரை வாழ வைத்து தான் வீழ்ந்து போனவன்.
     
    விட்டுக் கொடுத்தே வீணாகப் போனவன். 

    ஆண்டாண்டு காலமாக அடிமையாகவே வாழ்பவன்.

    இலவச  அரிசியை வாங்கிப் பொங்கி மாராட மயிராட நிகழ்ச்சி பார்த்து மல்லாந்து படுத்துறங்கும் மீப்பெரு நல்லவன்.

    வாக்களித்து வாக்களித்து வாழ்விழந்து போனவன்.எல்லாப் போலிகளையும் தவறாமல் நம்பி நம்பித் தடம் புரண்டவன்.

    தன்னுடைய வரிப் பணத்தில் தன்னையே அழிக்க ஆயுதங்கள் வாங்க அனுமதிக்கும் அருமையானவன்.

    ஒட்டு மொத்த உலகமும் இணைந்து தடைசெய்யப் பட்ட நச்சு எரிவாயு கொண்டு தமிழினம் ஒழிக்கும் போதும் தன்மை மாறாத தூயவன்.

    துள்ளி விளையாடும் பள்ளிக் குழந்தைகள் மீது கொத்தணிக் குண்டுகள் போட்டாலும் சித்திரத்தில் மலர்ந்த செந்தாமரையாய் இருப்பவன்.

    பாலியல் வல்லுறவில் கிழிக்கப் படும் கன்னித்திரைகள் கண்டும் கலங்காதவன்.

    செவிலியருக்குப் பதில் வெடிகுண்டுகளே தமது உறவுப் பெண்களுக்கு மகப்பேறு பார்த்தாலும் மனம் குமுறாத மாமனிதன்.

    இப்படி என்ன கொடுமை நடந்தாலும் அவன் வேறு நாட்டவன் நாம் இந்தியர் என்று உணர்ந்து கொள்ளும் அறிவாளி

    அளவான தண்ணீர் கூடத் தராத பல மாநிலங்களுக்கும் அளவில்லா உதவி செய்பவன்.

    தமிழன் என்றோர் இனமில்லை தனியே அவர்க்கு நாடில்லை என்று செய்ய பேருதவி செய்தவன்.
    இன்னும் நீளும்... அடி வயிறு பற்றி எரிகிறது ......

    எல்லாவற்றுக்கும் மேலாக யார் தமிழன் என்ற வினாவை ஒரு தமிழனையே கேட்க வைத்தவன் 

    உணர்வாளன்

    ''வாழ்ந்தாலும் தமிழுக்கும் 

    தமிழர்க்கும் வாழ்வேன்!
    வளைந்தாலும் நெளிந்தாலும்
    தமிழ்பொருட்டே ஆவேன்!
    தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்!
    தனியேனாய் நின்றாலும் என்கொள்கை மாறேன்!
    சூழ்ந்தாலும் தமிழ்ச்சுற்றம் சூழ்ந்துரிமை கேட்பேன்;
    சூழ்ச்சியினால் பிரித்தென்றன்
    உடலையிருகூறாய்ப் போழ்ந்தாலும்
    சிதைத்தாலும் முடிவந்த முடிவே!
    புதைத்தாலும் எரித்தாலும்
    அணுக்களெல்லா மதுவே!”