என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

சனி, 24 நவம்பர், 2012

எனது அம்மாவின் பிறந்த நாள் இன்று...


வாழ்த்துகூறி வணங்குவதை விட அவரை பற்றி சிறு குறிப்புகள்...

இதுவரை என் அம்மாவின் வாழ்க்கை குறிப்பே எனது வாழ்க்கை பயணத்தின் கையேடு....

பெண்களுக்கே அரசியாக 'பெண்ணரசி' என்று  'தந்தை பெரியாரால்' பெயர் சூட்டப்பட்டவள்...

வீரத்தில் ஊர் மெச்சிய சின்னதுரைக்கு இளவரசியாக முதற் மகளாய் உதித்தவள்...

கடின பொருளாதாரத்தின் விளிம்பில் கூட எங்களுக்கு பசி என்ற உணர்வை அறிய செய்யாதவள்...

நேர் சிந்தனையும் தளராத தன்னம்பிக்கையையும்  ஒரு பிடி சோற்றில் ஊட்டியவள்...

இன்று வரை தனக்கென்று சிந்திக்காமல் எங்களுக்கு என்றே  சிந்தித்தே தளர்வடைந்தவள்...

பண மூட்டையை சுமக்காமல் புண்ணிய மூட்டையை சுமக்க இன்றளவும் பயிற்சிப்பவள் ..

எந்நிலையிலும் போராட்டத்தையும் போர் குணத்தையும் இளமையிலே என்னில் விதைத்தவள் ...

தலைவர்  பிரபாகரனை நேரில் கண்டு இன்று வரை அவர் மீதான பக்திக்கு வழிவகுத்தவள் ...

இன்னும் சொல்ல சங்கதிகள் உண்டு பல ,, அடங்காது சொல்லில் அவளது வாழ்க்கை...

எந்தன் வாழ்நாள் சாதனையாளர் வரிசையில் அம்மாவுக்கே முதலிடம்... 

அவளே எப்பிறவியிலும் எனது அம்மாவாக 

அவளது பிறந்த நாளில் வணங்குகிறேன் இறைவனை சுயநலத்துடன்....

திங்கள், 19 நவம்பர், 2012

தமிழினத்தின் தலைமகன்....


தவமாய் தவமிருந்து  
எம் தமிழ்த்தாய் 
பெற்றெடுத்த
தமிழினத்தின் தலைமகன்....

மழைக்கு பின் மாதமாய் 
பனிக்கு முன்  மாதமாய் 
திகழும் கார்த்திகையாம் 
எம் தலைவன் பிறந்தான் ஒளியாய்,,,
இனம் காக்க அவனே வந்தான் புலியாய்...

இன உணர்வை உயிரில் கலந்தான்
உயிரை துச்சமென துயில் களைந்தான்..
செத்து  செத்து சாவை சலிப்படைய செய்தான்...
எதிர்த்தவனை எமனிடம் நட்புற செய்தான்...
நேர் நின்று எதிர்க்க இல்லாமல் செய்தான்...


இன்று முதல் எம் பதிவுகள் தொடக்கம்,,
அவனை பற்றி 
சிந்தித்தால் இல்லை சிந்தனையில் முடக்கம்...
அகிலத்தின் அத்தனை சரித்திரமும் அவனில் அடக்கம்...