என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

புதன், 30 மே, 2012

தமிழ் மொழி..........



நம் மொழியாவது தமிழ் ...........!
இனிதாவது இதனின் எழில்.....
உயிருக்கு இணையானது...
யாவர்க்கும் பொதுவானது...
தேனினும் இனிது நாவிற்கு...
இசையினும் இனிது செவிக்கு..
ஆதி அந்தம் அறியாத
உலகிற்கு மூத்தவள் எம் தமிழன்னை..
இவளுக்கு இடையூறு யாரும் செய்யும்
சிரமிழந்து செல்வது உறுதி...
அச்சமுறேன்..
தயக்கமுறேன்..
அவசியமெனில் இதில் சிந்தும்
எனது குருதி.....
இல்லை எனக்கு மறதி...
நடந்தவை அனைத்தும் என்மனதில்....

சனி, 26 மே, 2012

ஏரும் போரும் உனது தொழில்....

தவழ்ந்த மண்ணில்
தடம் மாறி போகும் தமிழா ...
பிறழாமல் நீயும்
தடம் மாறி போகும்
வழி தவறென்று அறிவாயோ...
இனாம்கள் இடரென்று தெரிவாயோ...
இங்கிதம் இல்லாமல் இசைவாயோ...
இம்சைகளுடன் இருக வாழ்வாயோ...
காரணங்கள் உணராமல் சாவாயோ...
உண்மைகளும் உரைக்காமல்....
உரிமைகளும் கொணராமல்..
உயிர் விட்டு போகலாமா...
இருந்த தடம் தெரியாமல் போக
நாம் என்ன அற்ப பதருகளா....
காலத்தை இழந்தோம்...
கடமையை துறந்தோம்..
வெந்த சோற்றுக்கு வெற்றியை இழந்தோம்...
வீழ்ந்தது நாம் அல்ல நம் சரித்திரம்...
காலத்தை வென்ற தமிழா..
களம் உனது பயில்விடம்,,
ஏரும் போரும் உனது தொழில்....
உலகத்தில் நம் இனமில்லை...
இனத்தில் முளைத்ததே உலகம்...
கணப்பொழுதும் கண்ணிமைக்க உசித்தமில்லை...
விழித்திடு ! விதைத்திடு ! உயிர்த்தெடு !
இனமும் மொழியும் உயிரென காத்திடு....


வெள்ளி, 25 மே, 2012

நிலவே...

நிலவே...
உனை பற்றி
நான் எத்தனித்த எண்ணங்கள்
ஈடாக எதை சொல்வேன்.....
கதிரவனிடம் கவர்ந்த
அனலை அகத்தில் அடக்கி
குளிரை இதமாய் எமக்களிப்பாயே..
தீதை கூட சுகமாக்கும் விந்தை உன்னிடமே...
நிலையாக நில்லாமல்
அரை மாதமும் ஓயாமல்
வளர்ந்து தோயும்
உன்னிடம் கற்றுக்கொண்டேன்
வாழும் வழிமுறையை...
உன்னை பெண்ணுக்கே வர்ணித்தோர் இருக்க..
எம் எழுத்து உனை வாழ்விற்கு
வர்ணனை செய்யும்........
நித்திய பூரணமாய் ஒளிர்வாய்
முப்பதின் பாதியில் முரணாக இருள்வாய்..
கார்மேகத்தில் காணமல் போவாய்...
நட்சத்திர படையலை அருகில் கொண்டு
அசராத அழகை அள்ளி தருவாய்...
நிலையில்லா இவ்வாழ்வை இனிதாக உரைப்பாய்...
இயற்கை அளித்த "தன்னம்பிக்கை" சிறப்பு நீ !!

ஆறாத காயங்கள்

ஆறாத காயங்கள் யார் யாரோ
தருவித்த பொழுதிலும்....
தேறாது என சொன்னவர் உள்ள பொழுதிலும்
நான்  தேறி போனதென்ன....!
வற்றாத அறியாமை கடலுக்குள் தடுமாறி
வீழ்ந்து விட்ட பொழுதிலும்.....
மீள்வது அரிதென்று உரைத்தவர் உள்ள பொழுதிலும்..
நான்  மீண்டு போனதென்ன.....!
வீழ்வதும் வாழ்வதும் என் கையிலே....
வீழ்த்த நினைப்பதும்..
விழ வைப்பதும்..
புரியாமல் எனை...
புரிந்து கொண்டவர் கையினிலே..

தன்னந்தனியேன்...



நானும் எம்மினத்தை  போலதான்...
என் சுயம் எம்மொழியை அண்டியே !!!
இனிக்கும் இனிமைதான் எம்மொழி...
வளர்ப்பார் குறைவுதானே.......நானும் அது போலத்தானே.....
எத்திக்கிலும் நீண்டு பரந்திருக்கும்...
தனக்கென்று அடி நிலம் இல்லாதிருக்கும்...
தன்னை பற்றி சிந்திக்காது எம்மினம்.......என்னை போலவே...
உலகிற்கே கற்பிக்கும் குணமுடையது...
தேசாதி தேசங்களுக்கும் தன்னை அர்ப்பணித்தது...
சமயத்தில் வாழ வக்கற்று நிற்கும்......தப்பாது ஒப்பாகி போவேனே...
உயிருடன் உருக்குழைவதும்..
தன்னிலையில் மாற்றம் கொள்ளாதிருக்கும் வரையில்...
நானும் எம்மினமும் தன்னந்தனியேனே...

வியாழன், 24 மே, 2012

அனைத்தும் நீயே..


ஆக்கமும் அழிவும் உன்னகத்தே..
இம்மையும் மறுமையும் உன்னாலே..
இழப்பும் வாய்ப்பும் உனக்கானதே..
இறப்பும் பிறப்பும் உன்னிடத்தே...
ஏற்றமும் இறக்கமும் உன் தடத்தே..
நன்றும் தீதும் உன்னடத்தையிலே ..
பெறுவதும் அளிப்பதும் உன்வசமே..
உன்
வீரிய வீச்சை வெளியிடு..
அதிலுள் உன் மூச்சை  கலந்திடு...
மாறாத மாற்றமொன்றை கண்டிடு..
மூடி விட்ட கதவை உதைத்திடு..
காணாத புது உலகை கண்டிடு..
வட்டத்தில் வடிவமாய்
கோலத்தில் புள்ளியாய் இராமல்....
சிறகிட்ட எண்ணங்களை
சிதறாமல் வெற்றிக்கு வழியிடு...
என்றும் நீ உனக்கானவன்.......

திங்கள், 21 மே, 2012

....அன்பு....

உணர்ச்சிகளில்
உருவம் கொண்டது...
உணர்வுகளுக்கு தலைமை வகித்து
உயிர்களை உயிர்ப்புற  செய்யும்..
நொறுங்கிய கண்ணாடி துகளிலும்
அன்பு பிம்பமாய் ஒளிரும்
அன்பென்னும் சொல்லில்
எரிமலை கூட உறைநிலை ஆகும்
அஞ்சா அரிமாவும் அரவணைப்பில்
அசைவற்று அசை போடும்...
அலைபாயும் அடிமனத்தின் ஏக்கத்தை
அமையுற செய்யும்..
அன்பை அடைக்கும் தாழில்லை..
அன்பால் தாழிட்டாலும்
உடைப்பாரில்லை...
எத்தனை துன்பமும் தீயில் பட்ட
துளிநீர் போல காணமல் போகுமே...
அறிவில் பெரியவனும் சிறியவனும்
அன்பிற்கு வேறில்லையே .....
சுற்றித்திரியும் மனித பறவைகளுக்கு
வேடந்தாங்கல் அன்புதானே...

வீழ்வதும் வாழ்வதும்

ஆறாத காயங்கள் யார் யாரோ
தருவித்த பொழுதிலும்....
தேறாது என சொன்னவர் உள்ள பொழுதிலும்
நான்  தேறி போனதென்ன....!
வற்றாத அறியாமை கடலுக்குள் தடுமாறி
வீழ்ந்து விட்ட பொழுதிலும்.....
மீள்வது அரிதென்று உரைத்தவர் உள்ள பொழுதிலும்..
நான்  மீண்டு போனதென்ன.....!
வீழ்வதும் வாழ்வதும் என் கையிலே....
வீழ்த்த நினைப்பதும்..
விழ வைப்பதும்..
புரியாமல் எனை  புரிந்து கொண்டவர் கையினிலே..

சனி, 19 மே, 2012

எனது அம்மா ........

அரசி என பெயரோடு எனை அரசியாய் ஆள வந்தவளே..
எனை ஒருயிராய் அணைத்தவளே.....
தசத்திங்கள்  உபவாசம் கொண்டு யாசித்தவளே...
சுவாசத்தை யாசகமாய் தந்தவளே...
பசியறிந்து நீ உண்ணாமல் உணவளித்தவளே...
இணையாக படைத்தவனை பின் தள்ளியவளே...
உறவுகளுக்கு அப்பாற்பட்டு அங்கமாகி போனவளே...
ஆண்டவனின் பிம்பத்தை சுயமாக கொண்டவளே....
எனது உணர்ச்சிக்கு உரு கொடுத்து வளர்ச்சி கண்டவளே...
உனக்கு நன்றியுரைப்பது நன்றல்ல..
இப்பிறவி போதாம்மா உன்னோடு வாழ..
சுயநலமே என்றாலும் நீயே எப்பிறவியிலும் என் தாயம்மா...

வியாழன், 10 மே, 2012

இலக்கு


இலக்கை அடைந்தது அம்பு அல்ல...
எய்தவன் வேகம் ...
பாய்ந்தது அம்பின் கூர்மையல்ல...
அவனின் பார்வை...
கருத்தில் சிதறி
இலக்கை தவற விட்டு
அம்பை குறை கூறி
முனை மழுங்கிய திறனோடு
வாழ்ந்து பயனென்ன.....
இல்லையென்று எதுவுமில்லை...
இல்லாமலிருப்பது நன்றுமில்லை...
உனக்குள் இருப்பது  ஆயிரம் அரிமா !!!
அடைத்து வைத்தால் அகிலம் அறியுமா !!!
உன் வேகத்தை அம்பில் வையப்பா..
பார்வையை இலக்கில் செலுத்தப்பா.....
இனி பாரில் உனக்கிணை யாரப்பா !!!!!!

புதன், 9 மே, 2012

விரல்களுக்குள் உலகம்....


விரல்களுக்குள் அடங்கி போனதே உலகம்....
இதற்குத்தானா  நமக்குள் இத்தனை கலகம்...
நண்பா ....
மீண்டும் பிறக்க போவது இல்லை உறுதி...
இனி சிந்தாமல் செய்ய வேண்டும் குருதி..
சிந்தையை விரித்து..
உலகை  உணர்ந்து....
வட்டத்துள் அடங்காமல்..
உணர்வை சுருக்காமல்...
உன்னை உனக்கே புரிந்து  வாழ்ந்திடு நண்பா....
நட்பை சிந்தி...
அன்பை தெளித்து...உறவுகளை வளர்த்திடு...
வம்பை குறைத்து...
வீரத்தை விதைத்து தீயோர்களை ஒடுக்கிடு...
சென்றதை செலவில்
வருவதை வரவில்
இருப்பதை கருத்தில் வைத்து...
சந்தோச சரக்கை மக்கள் சந்தையில் வைத்து....
நிறைவோடு வாழ்ந்திடு தன்னிறைவாக !!!


ஞாயிறு, 6 மே, 2012

மரணித்து காட்டு...


தடித்த தோள்களுண்டு...
துடிக்கும் கரங்களுண்டு....
வெடிக்கும் வீரமுண்டு....
தமிழா !!
எல்லையை தாண்டும் பாத வேகமுண்டு...
மலை முட்டி நொறுக்கும் தேக பலமுண்டு ...
இத்தனைக்கும் முரண்பாடான எண்ணமுண்டு..
முரண்பாட்டால் முடியாமல் போன
சரித்திரமும் உண்டு....
தமிழா நீ !!
சாதியால் சாதித்து காட்டு...
மதத்தால் முடித்து காட்டு...
கட்சியால் கர்சித்து காட்டு...
இதில் எதிலும் முடியாவிட்டால் மரணித்து காட்டு...
கன்னியரிடம் கவிழ்ந்து மரணிப்பதை விட ..
வாழ்வின் வெறுப்பில் மரணிப்பதை விட....
எதுவும் முடியா முயற்சியால் மகிழ்வுடன் மரணித்து காட்டு...

வெள்ளி, 4 மே, 2012

தேவை தேவையா !!!

இந்த சொல் இல்லா விடில் இனித்திடும் 
வாழ்க்கை சப்பென்று சலித்து விடும்,,
இது நிலையா வாழ்வில் நிலையானது..
ஆலயங்கள் அவசியமற்று...
தேடுதல்கள் குறைவுற்று,,
பலமும் பலவீனமும் சரிசமமாகும்...
ஆசை அசைவற்று போகும்...
அவுடதங்கள் இல்லாமல் போகும்..
சமர்கள் சமரசமாகி
சரித்திரங்கள் சத்தமில்லாமல் போகும்...
உணர்வுகள் உள்வாங்கி கொண்டு
உணர்ச்சிகள் உதவாமல் போகும்....
தேவையொன்று இல்லாவிடில்
இனமில்லை
மதமில்லை
இறைவனுமில்லை...
ஒவ்வொரு
தொடக்கமும் முடிவும்
ஆக்கமும் அழிவும்
தேவையை ஒற்றியே...........

வியாழன், 3 மே, 2012

உழைப்பாளி

உழைத்து உழைத்து
ஓடாய் போனவனும்
ஓய்வெடுக்க உலகம் கொடுக்கும்
ஒரு நாள் விடுப்பு...

முதலாளிகளின் நிமிர்ந்த
நடையின் பின்னிருக்கும்
முதுகெலும்புதான்-இந்த
உழைப்பாளி ..

கால் வயிற்று கஞ்சிக்கு
காலமெல்லாம் போராட்டம்-இவன்
இல்லையென்றால்
காணி நிலமெல்லாம் நின்று போகும் ஏரோட்டம்,,,

அரிவாளும் சுத்தியலும்
ஏந்திய பொதுவுடைமை வாதியவன்...
நல்ல
பொறுப்புள்ள மனிதனவன்...

கூலிக்கு மாரடிக்கும்
கூட்டமாகும்..
கூடி நின்னுட்டா
நாடெல்லாம் வாட்டமாகும்...

உழைக்கும் வர்க்கம்...இருக்கும்வரை
நம் வாழ்வு சொர்க்கம் .....

நன்றியுரைக்கிறேன்.......

மனிதனுக்கே உரித்தான நன்றியை
நலமுடன் உரைக்கிறேன்....
மறந்து போன மனிதனை
மறந்து போக நினைக்கிறேன்...
நன்றி கூற
கடமையுள்ளவர்களை
தவிர்க்கிறேன்...
வாழ்க்கையை பயிற்சிக்க செய்த
துரோகிகளுக்கு மிக்க நன்றியுரைக்கிறேன்...
சுயநிலையை உரைப்பித்த
எதிரிகளுக்கு ..
வாழ்நிலையை உயிர்ப்பித்த
வறுமைக்கு,,,
சூழ்நிலையில் உறைய வைத்த
உறவுகளுக்கு தவறாது நன்றியுரைக்கிறேன்...
உணர்வுகளை மரத்துப்போக செய்த
கடந்து போன காதலுக்கு.....
திக்கு தெரியாத பொழுது
திசை காட்டிய நண்பர்களுக்கு....
மீண்டும் மீண்டும் நன்றி கூறுகிறேன்...
இத்தனைக்கும் மனித பிறவியாய் படைத்து
அல்லாட வைத்த இறைவனுக்கு கோடி நன்றியுரைக்கிறேன்...