என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

செவ்வாய், 12 நவம்பர், 2013

ஒரு பயணத்திற்கான புறப்பாடு...




நீண்ட
நெடுந்தொலைவு
பயணத்திற்கான
புறப்பாட்டுக்கு
தயார் நிலையில்
பயணித்து கொண்டிருந்தேன்
கட்டுச் சோற்றை
நம்பிய பயணமல்ல
இது நடைப் பாதை
வணிகத்திற்கான
பயணம்...
பயணத்தில் சற்றே
களைப்புற்றாலும்
தோல்வி நிலை எட்டி விடக்கூடும்...
கடந்த தொலைவை
கணக்கிட்டு கடக்கும்
தொலைவை கணக்கிட இயலாது...
ஏனெனில் இது
இலக்கில்லாத பயணம்;
நட்பாய் வருவோரும்
துணையாய் தொடர்வோரும்
இங்கு நிலையில்லை;
நிதர்சனமான நிலையில்
சுயநிலை மட்டுமே
என்னில் பயணிக்கும்....

வெள்ளி, 8 நவம்பர், 2013

அச்சம் எதற்கடா...

திரண்டு வா
தமிழா !
மிரண்டு போவான்
எவனும் !
முற்றத்தில்
முடங்கினால்
நிகழாது மாற்றம்,
அச்சத்தில்
ஆர்பரித்தால்
அனாதையாய்
போகுமடா இனம்....
எழுஞாயிரை கைக்
கொண்டு எழுப்பு
பகைவரின் கொட்டத்தை
முடக்கு
இடறொன்று இல்லாமல்
நம்மினத்தை தொடக்கு...
நீதான் நானடா
நான்தான் நீயடா
பின்
அச்சம் எதற்கடா...