என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

சனி, 31 மார்ச், 2012

வாளும் வேலும்....


வாள் வேல்  வீரம்
ஆதிதமிழர்க்கு
சொந்தமானது...
உயிர் கொல்லும்
உன்னத ஆயுதம்...
அடையாளமாய் இனத்திற்கு..
ஆதாரமாய் வீரத்திற்கு...
எடுத்தார் கைப்பிள்ளை போல
எவருக்கும் உதவும்....
நீதி செய்வதற்கு உருவெடுத்தது ...
எதிரிகளை களையெடுக்க..
உதிரிகளை பலியெடுக்க.....
நல்லோர் கைகளில் குடிகொண்டது..
காலமாற்றத்தில் கை மாறியது..
அநீதிகளுக்கும் துணை கொண்டது
தோட்டாகளில் தோற்றம் மாறியது
சட்டசிக்கலில் மாற்றம் கொண்டது
இனி காண இயலாது
வல்லவர் கையில்............


வியாழன், 29 மார்ச், 2012

உணர்ச்சி...

ஐந்தறிவையும் ஆறறிவையும்
பிரித்து புரியவைக்கும்....
ஒன்பதாய் பிரிந்து
மானுடனை ஆட்டிப் படைக்கும்....
கட்டுப்பாடுகளை களைந்து
கட்டவிழ்த்து களைப்புற செய்யும்..
இந்திரியங்களை இடைமறித்து
இம்சையுற செய்யும்...
மிகையுற்றால் கண்களில்
நதி பெருக்கெடுக்கும்...
குறையுற்றால் வாழ்வின்
அர்த்தம் குறைவெடுக்கும்....
உணர்வுகளின் புதையல்
தூண்ட தூண்ட ஊற்றெடுக்கும்..
புரட்சிகளும் போர்களும்
பூகம்பமாய் உருவெடுக்கும்...
நாளமெல்லாம் சுருங்கி
சித்தம் தெளிய வைக்கும்...
உணர்ச்சி ....
இது இல்லாவிட்டால் ஏது எழுச்சி...

புதன், 28 மார்ச், 2012

புலியாக வந்தாய்..........

பனி மாதத்தில் தமிழன் பிணி..
போக்க புலியாக வந்தாய்..........


துவண்ட தமிழினத்தை சுமக்க...
வேலுபிள்ளைக்கு பிள்ளையாய் வந்தாய்..

இருண்ட தமிழ் வானத்தில் ...
இளம்பரிதியாய்  உதித்தாய்.....

யார் தமிழன் என்ற கேள்விக்கு..
இவன்தான் தமிழன் என்ற பதிலோடு வந்தாய்...

எங்கும் குட்டுப் பட்ட தமிழனில் ...
குன்றாய் நிமிர்ந்து நின்றாய்...

வழி கொண்ட தமிழரை ...
வழி நடத்தி சென்றாய்.....

ஓர் உயிர் உன்னதமானது...
அதனினும் தன்மானம் பெரிதென்றாய்....

இமயம் கண்ட சோழர்க்கு நிகராக....

புலிக்கொடி பறக்க செய்தாய்...

மரணத்தை வென்று காலத்தை...
கையில் கொண்டாய்....

நிகரில்லா தலைமை உனது வசம்...
தலைமையேற்க சடுதியில் வருவாய்..!

புதன், 14 மார்ச், 2012

இனியும் தேவையா....

இந்தியன் என்று சொல்ல
இனியும் தேவையா !!!
எமது  தேச பற்று திசை மாறுகிறது..
இனம் காக்க துப்பில்லாதவன்
தேசத்தை நேசித்தென்ன லாபம்....
இனமே அழிந்தாலும் சேற்றில் மலர்ந்த..
செந்தாமரை போல் வீற்றிருக்கும் தமிழா !!
உணர்வில்லாமல் போக நீ என்ன சவமா ...
ரத்தம் சிந்தி உணர்வு கொள்ள வேண்டாம்..
சித்தம் விரிந்து இன உணர்வை உணர்த்தடா..
அகிலத்தை ஆண்ட இனம்..
அடிமையாய் போய் விடலாமா !!
வெள்ளையனுக்கு உள்ள உணர்வு கூட ...
நம்மவனுக்கு இல்லையே...
இனம் காக்க தவறிய இந்தியனே !!!
நீ என் உடன் பிறந்தோன் அல்ல....
சாட்சியாக கூட தயங்கும் இந்தியன் யாவரும்
ஒரு தாய் மக்கள் இல்லை...
எம்மினம் காக்க கை கொடுக்காத இந்நாடு..
எம் தாய் நாடில்லை....இந்நிலை விரைவில்
வரைபடத்தில் மாற்றம் காண வழிவகுக்கும்..
எம்மின நிலைமாற பூலோகத்தில் வழிபிறக்கும்.
இது எம்மினத்தின் சத்திய வாக்கு..
.

திங்கள், 12 மார்ச், 2012

தமிழனும் தமிழினமும்...

களமாடிய கால்கள் கண்ணயர..
களவாடிய பொய்கள் விண்ணுயர...
காய்ந்து போனதே எம்மினம்.........

சமர்புரிந்து உலகால படைத்த சரித்திரம்..
நமர் தலை மீது எழுதாமல் எழுதி போன சாத்திரம்..
புரியாமல் போனதே இக்கணம்........

களம் கண்டவர்கள் காணமல் போக...
கண்டதாக சொன்னவர்கள் அரசாள...
வீணாகி போனதே கண்ட களங்கள்....

புரிந்து கொண்டால் மீதமாகும் ...
புரியாவிட்டால் சேதமாகும்...
தமிழனும் தமிழினமும்...