என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

வெள்ளி, 17 பிப்ரவரி, 2012

கவிதையின் கதை


உள்ளத்தின் உளறல்கள்
ஒவ்வொன்றாய் உதிரும்...
எணண்ங்களும் எழுத்துக்களும்
எதிரெதிராய் வாள் வீசும்...
நாளச்சுரப்பிகள் கற்பனையை
கவிதையாய் சுரக்கும்...
உருவமில்லா சிற்பங்கள்
காகிதத்தில் உருவாகும்...
உயிரில்லா எழுத்துக்கள்
மூச்சுவிட்டு உயிர் வாழும்...
இயற்கையின் சுகிர்வை
உணர்த்தும் ரசனைகளின் ஆலயம்....
காதலில் களிப்போர்க்கு
கண்டபடி கவிபாடும்...
காதலில் நொந்தவர்க்கு
பிரிவில் விழி மூடும்...
அழுகையின் ஆற்றாமையை
அதிர்வாய் வெளிபடுத்தும்...
அடங்கா ஆத்திரத்தின்
கிளர்வாய் வெடித்து சிதறும்...
கவிபாடி திளைத்தோர்க்கு
உண்மை உறைவிடம்...
எனை போல அரை குறைகளுக்கு
அற்புத இருப்பிடம்.........................

வியாழன், 9 பிப்ரவரி, 2012

தூக்கம்..


நாளெல்லாம் 
பொழுதெல்லாம் 
நெருப்பாய் வீசினாலும்,,,
நிலா காலம் 
வந்தவுடன் வந்துவிடும் 
வரமாக தூக்கம்...
வரமாகும் ! தூக்கம் 
அளவாகும் போது !!!
மிதமாக கனாக்கள் 
வந்து செல்லும் ...
இடையே வினாக்களை 
உசுப்பி செல்லும்,,
மீதமான தூக்கம்
மீறி செல்லும்
நடை முறையை,,,
வரையற்ற உறக்கம்
வழிமுறையை மாற்றும் ...
ஆயுளில் அரை அளவை 
ஆட்கொள்ளும்..
ஆயுளின் நிரந்தரத்தை
உட்கொள்ளும்...
குடிசையும்  கோபுரமும்
பாகில்லை
இந்த நிரந்தர உறக்கத்திற்கு...

புதன், 1 பிப்ரவரி, 2012

வெற்று மனிதனடா !!!

வெற்று மனிதனடா நான்...
வீறு கொண்டு
வீணாகி போனேன்,,
துக்கம் தாளாமல்
துவண்டு போனேன்,,
குற்ற உணர்ச்சியில்
குறுகி போனேன்..

வாய் சொல்லில் வாள் வீசும்
வெற்று மனிதன் நான்..

உறவு காக்க
உணர்வற்று போனேன்..
உயிர் காக்க
உதிரம் வற்றி போனேன்..
எண்ணி வருந்தையில்
உயிரற்று போனேன்..
ஆயுதங்கள் பல தாங்கி
எனை காத்து கொண்டேனே !!!
இனம் காக்க முயலாமல் போனேனே...
நான் வெற்று மனிதனடா...