என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

புதன், 31 அக்டோபர், 2012

மரணம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட நாள் .......



நூற்றாண்டில் நிகழ்ந்திடாத அதிசயம் 
இவரது பிறப்பும் இறப்பும் ஒரே தினத்தில்....

இனி இவர் போல பிறக்க இல்லை வாய்ப்பு...
அது தருணத்தில் எமன் செய்த ஏய்ப்பு....

தர்மதேவதையின் தலைமகன் 
இவர் 
அண்டியோர்க்கு அள்ளி 
கொடுத்து சிவந்த பொற்கரம்...
ஆங்கிலேயனை அதிர செய்தது 
இவரது  இரும்புக்கரம்....
சாதியில் இல்லை இவருக்கு பேதம்...
தர்மம் மட்டுமே இவர் வாழ்வின் வேதம்...
வங்கத்துக்காரன் ஏற்றுகொண்ட தமையனாய் 
ஆங்கிலக்காரன் அஞ்சி நின்ற சிங்கமாய்....
இவர் சொல்லிய அரசியல் சூசகம்
ஏற்றிருந்தால் இல்லை இன்று யாசகம் .....
தன் தசை நரம்பு எலும்பெல்லாம் 
தேசத்தை கலந்து
குருதியில் உறுதியை குழைத்து 
இறுதி வரை தனக்கென்று வாழா மனிதரை 
வாழையடி வாழையாய் வணங்கி 
நிற்றல் எம்மினத்தின் பெருமையாகும்...

வன்முறை...



நிகழ்ந்ததும் நிகழபோவதும் உணர்த்தும் 
இதன் விளைவை......
ஆரம்பம் சிறு உந்துதலில் - இது 
முன்னறிவிப்பின்றி முடிவுறும்.....
கை கொண்ட செயலை கைவிடும் 
எண்ணம் ஏரிநீர் முதலைக்கு ஒப்பாகும்...
தொட்டு விட்டு விட்டுவிட இயலாது,,
கை கொண்டோர் கரைசேர
கடைநிலை நாட்களும் துணைசேராது,.....
புரட்சிக்கு அடையாளம்
வன்முறை அல்ல...
அறியாதோர் அளவிடப்பட்ட 
வாழ்கைக்கு உட்பட நேரிடும்...
புரியும் வரை நிகழாது மாற்றம்......

வெள்ளி, 26 அக்டோபர், 2012

நம்பிக்கை



புவி ஈர்ப்பு விசைக்கும் 
நம்பிக்கைக்கும் 
இடைக்கொண்டது  
நூலிடை அளவே...
இல்லாதோர்க்கு கண்ட 
மாந்தரெல்லாம் பகையே,,
கொண்டவர்க்கு வரமே வாழ்க்கையாகும்...
தாளிட்ட கதவுகள்...
இடைமறிக்கும் வேலிகள் ....
அளவிட்ட தொகைகள்...
இத்தனைக்கும் அவசியம் 
அவசியமற்று தழைக்கும் மானுடம்...
நம்பிக்கை
இல்லா வாழ்வு தன்னை அழிக்க 
ஆயுதம் வீசும் நிகழ்வாகும்...
நம்பி வாழ நம்பிக்கையிருந்தும் 
நம்பிக்கை கொண்ட வாழ்க்கை 
எம்மில்  இல்லை என்பதே நிதர்சனம்....

புதன், 24 அக்டோபர், 2012

உணர்வு வியாபாரிகள்...


எங்கும் உணர்வின் விளைச்சல் 
எம் தமிழ் நிலத்தில்...
எம் நிலத்தில் நீர் வற்றிய போதும்
எம்மின் 
உணர்வுகள் வற்றியதில்லையே...
ஆதி சொந்தங்கள்  
அனாதையான அந்நேரம் 
உணர்வுகள் தளிர்க்கும்...
ஆழியில் சொந்தங்கள் 
குருவிகளாக்கும் தருணம் செழிக்கும்...
அணைகள் 
அடைத்தாலும் உடைத்தாலும்
சீர்கொண்டு உணர்வு தழைக்கும்...
எம் நில உணர்வுகள் போல 
பிரபஞ்சத்தில் எதுவும் பெரிதில்லை...
ஆயினும் 
முற்றிய எம் உணர்வு பயிரை..
பசிக்கு உணவாய் ,
பிணிக்கு ஔடதமாய் 
எம்தேசம் செழிக்க இல்லாமல்....
தான்தோன்றியாய் எம்முணர்வை...
விற்க வியாபாரிகள் மட்டுமே இங்கு...

வெள்ளி, 19 அக்டோபர், 2012

செவ்வானம்



செவ்வானம் சிவக்க 
ஆதவனும் அந்தியும் கூடும்..
வானம் சிவக்க 
காண்பதெல்லாம்
சிவந்து நிற்கும்....
காணும் கண்களில் 
இல்லை மாற்றம்...
கண்ட
காட்சியிலும்  இல்லை மாற்றம்...
சூழ்நிலை மாற்றமே நிதர்சனம்....
ஏனடா மனிதா...
இதில் இத்தனை விமர்சனம்...
சூழ்நிலைக்கேற்று வாழு...
இனி இல்லை சென்மம் ஏழு...

வியாழன், 18 அக்டோபர், 2012

கலங்குமா சிந்தை,,,



மீளா துயரங்கள் என்னில் 
கொண்ட போதும்
அடுக்கடுக்காய் அவமானங்கள் 
அலங்கரித்த நிலையிலும் 
கலங்குமா எனது சிந்தை..

சிறுநரிகளின் தந்திரத்தால் 
சிந்தனைகள் சிக்கனம் 
கொள்ளும்..
மதிகொண்டு வென்றிட 
நினைத்தால் 
சூழ்நிலைகள் 
வெற்றிடம் கொள்ளும்..
அரிவை தந்த ஆனந்தமும் 
ஆளுமை கொள்ளும்...
நிதி நிலைமை 
நிலை மாற்றம் செய்யும்...
களிப்பும் கலக்கமும்....
எத்தனையோ 
இதில் சிந்தையை 
கலங்க செய்தால் 
என்னவாகுமோ....

திங்கள், 15 அக்டோபர், 2012

நெஞ்சில் தீ




பற்றிய தீ ...
தீராமல் என்றும் நெஞ்சினில் 
எம் இனம் கண்ட தீரா வஞ்சம் 
எவ்வகையில் தாங்கும் நெஞ்சம்....
கொண்ட பகையில் 
நட்பின் கலப்படம்....
கண்ட உறவில் 
சாவின் நிழற்படம்...

அணையுமோ 
நெஞ்சத்தின் பிழம்பு...

அணைகட்டி நிற்கும் சலனங்கள் 
முளைவிட்டு போகும் ஆசைகள்,,,
நிலையற்று போகும் பொய்கள்...

இத்தனையும் நெஞ்சினில் தீயாய்...
அணைவது சாத்தியமா..

எழுதப்படாத தீர்மானங்கள்
எழுதிவைத்த உணர்வற்ற உரிமைகள்..
தகதகக்கும் தனிவற்ற கொள்கைகள்...
நீர் கொண்டு அணைத்திட இயலுமோ...
செந்நீர் காணாமல் அணைந்திடுமோ..

சிதைக்கு வைத்த தீயே  தீயை அணைத்திடும்...
அதுவரை நெஞ்சினில் இருந்திடும்...அணையா தீ....

ஞாயிறு, 14 அக்டோபர், 2012

மறதி...



மனித மூளைக்கு உரித்தான 
முதல் நிலை..
தீதினை முற்பாதி 
நன்றினை பிற்பாதியிலும் 
நிகழச் செய்யும்..
மறதியில் 
கடந்து போனதும் 
மறைந்து போனதும் 
உருச் செய்யும் சுவடுகள் உருக்குலையும்....
இதில் 
செயல்களும் 
மரணங்களும் உட்கொள்ளும்...
தீர்ந்து போகும் மக்கள் மனதில்
நன்றிகளும் தீரா வடுக்களும்...
இதய சுற்றிகரிப்பில் முதலுதவி செய்யும்...
இதமான இணைவிற்கும் 
வஞ்சமில்லா வாழ்வுக்கும்..
மறதி மகத்துவமே !!!


செவ்வாய், 2 அக்டோபர், 2012

நண்பா....


நலமென்று உரைப்பேன் உன் உறவை...
உறவால் கிடைத்த இன்பத்திலும் 
உன் உறவால் கிட்டிய பேரின்பம் பெரிதென்பேன்...
ஆணென்று பெண்ணென்று இல்லை பேதம்...
வாழும் உயிர்களுக்கு நட்பு மட்டுமே வேதம்...
நட்பு...
சில்லென்று வீசும் 
சுள்ளென்று பேசும் 
சிறு தவறிலும் 
உடையாமல் நட்பு கொள்ளடா நண்பா....
நீ இல்லாமல் இயங்காது சூழல்...
உள்ளொன்று வைத்து புறமொன்று 
நினைத்தால் நிலைக்காது,,
அதில் தழைக்காது அழகிய நட்பு...