என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

சனி, 27 ஏப்ரல், 2013

தென்னாடுடைய சிவனே ..



ஆலகாலத்தை கண்டத்தில் 
சுமந்தான்; இவனே ஈசன் 
எம் பேரினத்தின் நேசன்,
இனம் காக்கும் பொருட்டே 
ஆனான் சிவம்; அன்பிலும் சிவம் 
பகை முடிக்க ஆடினான் 
ருத்திரம் இவனில் எழுந்ததே 
ரௌத்திரம்...
பிட்டுக்கு மண் சுமந்தான்
ஈசன்;இவனோ மண்ணுக்கு 
இனத்தை சுமந்தான் 
துவக்கெடுத்து துவக்கினான் 
திருவிளையாடலை...
புலிகள் புடைசூழ தர்மத்தின் 
தலைமகன் தலையெடுத்தான்
எதிரிகளின் தலை எடுத்தான்
இனத்தில் களையெடுத்தான்..
தமிழின யுத்தம் தொடங்கினான் 
சற்றே அதர்மம் தலை தூக்கியதே
தவிர தர்மம் வீழாது..
மீண்டும் 
எம்மினத்தின் ஈசன் வருவான் 
பலியெடுக்க புலிகள் வரும்
'பிரபா' தாண்டவம் தொடரும்....

சிந்தை கொண்டேன்..



மண்ணில் மரணிக்கவே 
மனிதம் கொண்டேன்-ஆயினும் 
சிந்தையிலோ தேவைகள் 
சில்லறையில் அத்துனையும் 
அடங்கிப் போகுமே கல்லறையில்...
விதை நெல்லை பசிக்கு புசித்திட்டால் 
வீசும் காற்றிலும் பஞ்சம் வீசாதா..
நாற்றாங்காலில் வசித்திட்டால் 
நாடும் நசாமாய் போகாதா.. 
ஆலகால விசமொன்று 
அமிர்தமாய் இனிக்கிறதே நாவில் 
மனிதம் பயணிக்கிறதே சாவில்...
பாட்டனோ நூறில் 
அப்பனோ அறுபதில்
நானோ நாற்பதில் 
நாளை எம் பிள்ளையின் சாவை அறிவேனோ....

செவ்வாய், 9 ஏப்ரல், 2013

பிரபாகரன்

என் சுய நிலையின் 
ஆதியும் அந்தமும் உன் பொருட்டே
நீயே என் அடையாளம்...
உயிர் நிலையே வாழ்நிலை
கணக்கென்று கொண்டவனில் 
இன உணர்வை உள்தாழிட்டு 
எம் விடுதலை வேட்கையை 
உடைத்து வரச் செய்தவன் நீ...
எம் தன்னிலை விளக்கத்தை 
ஒற்றை வரியில் உரைப்பேன் 
---------------பிரபாகரன்----------------



செவ்வாய், 2 ஏப்ரல், 2013

விசித்திரமானவன்

ஒரு பொழுதும் வெற்றி 
 
எமக்கு அவசியமில்லை - எம்மில் 
 
சமாதானமும் சண்டையும் 
 
என்றும் நிலைக் கொள்ளும்.
 
முதலில் தோற்பதும்,
 
விளிம்பில் வெல்வதும் என் வாடிக்கையாகும்..
 
எனவே தோல்விக் களைப்பும் 
 
வெற்றிக் களிப்பும் எம் 
 
உள்ளத்தில் ஒருசேர பயணிக்கும்....
 
பரிவு கொள்வோரும் பகைக் 
 
கொண்டோரும் எம்மில் 
 
நிரந்தரம் செய்வர் - எம்மை 
 
வீழ்த்தி வெற்றி கொண்டோரும் ,
 
எம்மில் வீழ்ந்து தோல்வி 
 
கண்டோரும் நட்புக்கொள்வர்...
 
அமிலமும் அமிர்தமும் அகத்தில் கொண்டவன் ,
 
விடைகளுக்கு வினாவளித்து
 
விளையாட்டும் விபரீதமும் ஒன்றிணைந்த
 
நான் சற்றே  விசித்திரமானவன்....